24
தொகுப்புகள்
==சிங்களப் போர் ==
சோழர்களிடம் தோல்வியை அடைந்ததை பராக்கிரம பாகு ஏற்றுக் கொள்ள இயலவில்லை.இதனால் தனது தோல்வியை அகற்ற பராக்கிரம பாகு புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் போன்ற ஊர்களில் படைகளைத் திரட்டி படகுகளையும் ஆயத்தம் செய்தான். இதனை ஒற்றரிந்த சோழன், அம்மையப்பா அண்ணன் பல்லவராயன் தலைமையில் படை ஒன்றை திரட்டினான்.
'''சிங்களனின் பாண்டிய உறவு'''
சோழர்களிடம் வலிமையை இழந்த சிங்களன், தான் பராக்கிரம பாண்டியனிற்கு உதவியதால் தான் இந்த தோல்விகளை அடைய நேர்ந்தது என்பதனை உணர்ந்து, தனது ஆதரவை குலசேகரப் பாண்டியனிற்கு நீட்டினான். தனது புதல்வியை குலசேகரப் பாண்டியனிற்கு திருமணம் முடிப்பித்தான். இதனால் ராஜாதி ராஜன் தனக்கு உதவியதை மறந்த குலசேகரன் சிங்களனின் சொற்படி நடக்க ஆரம்பித்தான். அரண்மனை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த சிங்களர்களின் தலை தனை அகற்றி அவர்களுக்கு கர்தூன் நாட்டினான்.
இதனை அறிந்த சோழன் குலசேகரன் பால் வேங்குண்டேழுந்தான், தனது உதவிகளை மறந்து சிங்களனுடன் தொடர்புக் கொண்ட குலழேகரனை ஆட்சியை விட்டு நீக்குவதற்கு முடிவு செய்தான்.
இவ்வாறு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான் இரண்டாம் ராஜாதி ராஜ சோழன்.
|
தொகுப்புகள்