இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎இந்திய மாநிலங்களின் உருவாக்கம்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 321:
 
== இந்திய மாநிலங்களின் உருவாக்கம் ==
தற்போதைய [[இந்தியா]], பாகிஸ்தான், [[வங்காளதேசம்]], [[பூட்டான்]] ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த [[பிரித்தானிய இந்தியா]] இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைஸ்ராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்]], [[ஐதராபாத் இராச்சியம்]] போன்ற 526 [[சமஸ்தானம்|சமஸ்தானங்கள்]], பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன.
 
பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: [[அஜ்மேர்-மேர்வாரா]], [[அசாம்]], [[பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)|பலூசிஸ்தான்]], [[வங்காள மாகாணம்]], [[பிகார் மாநிலம்]], [[மும்பை மாகாணம்|பம்பாய்]], [[மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா|மத்திய மாகாணம்]], [[கூர்க்]], [[டெல்லி]], [[மதராஸ் மாநிலம்|மதராசு]], [[வடமேற்கு எல்லை மாகாணம்|வடமேற்கு எல்லை]], [[ஒரிசா]], [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]], [[சிந்து மாகாணம்|சிந்து]], மற்றும் [[ஐக்கிய மாகாணங்கள்]]. பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன.