அபூர்வி சண்டேலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
new
No edit summary
வரிசை 33:
== புற இணைப்புகள்==
* [http://www.issf-sports.org/athletes/athlete.ashx?personissfid=SHINDW0401199301 Apurvi Chandela profile] at [[International Shooting Sport Federation|ISSF]]
 
 
 
 
 
 
 
= [[அபூர்வி சண்டேலா]] =
'''அபூர்வி சண்டேலா''' '''(பிறப்பு ஜனவரி 4, 1993)'''  10 மீட்டர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை.  அவர்  அதில் உலக சாம்பியன் மட்டுமல்லாது, 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். மேலும் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான அர்ஜுனா விருதைப் பெற்றுள்ளார் அபூர்வி.
 
'''வாழ்க்கை பின்னணி'''
 
சண்டேலா, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜனவரி 4, 1993 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் விளையாட்டை பின்னணியாக கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் தாய் பிந்து சண்டேலா ஓர் கூடைப்பந்து விளையாட்டு வீரர்  மற்றும் அவரது  தந்தை குல்தீப் சிங் சண்டேலா தீவிரமான விளையாட்டு ரசிகர். சண்டேலாவின் ஒன்று விட்ட சகோதரர்களுள் ஒருவர், பகுதி நேரமாக துப்பாக்கிச்சுடுதலில் ஈடுபட்டு வந்தார். [1<ref>{{Cite web|url=https://www.bbc.com/tamil/topics/c2dwqdn01v5t|title=இந்தியா|website=BBC News தமிழ்|language=ta-IN|access-date=2021-02-17}}</ref>]
 
 
சண்டேலா ஆரம்பத்தில் ஓர் விளையாட்டு பத்திரிகையாளராக ஆகவே ஆசைப்பட்டார். ஆனால் 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த அபினவ் பிந்த்ரா  தங்கப் பதக்கம் வென்றதைப்  பார்த்து ஈர்க்கப்பட்டு பிறகு துப்பாக்கிச்சுடும் விளையாட்டை தேர்ந்தெடுத்தார். அதில் தன் திறமையை கண்டு தனது தந்தை தனக்கு ஓர் துப்பாக்கியை பரிசளித்ததாக கூறுகிறார் சண்டேலா. [1]  துப்பாக்கிச் சுடுதல் போன்ற உயர் ரக விளையாட்டை தொடர அவரது பெற்றோர் தங்களின் முழு ஆதரவையும் வழங்கினார்கள். ஆரம்ப காலத்தில் ஜெய்ப்பூரில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி எடுக்க சண்டேலா, தினமும் 45 நிமிடங்கள் பயணிக்க வேண்டியிருந்தது. எனினும் அவரது பெற்றோர், சண்டேலாவிற்கு வீட்டிலேயே பயிற்சி எடுக்கும் சரகத்தை அமைத்துக் கொடுத்தனர். அவரது தாயார் அவரின் பயிற்சிகளை உன்னிப்பாக கவனிப்பதுடன்  அவருடன் போட்டிகளுக்கும் சென்று வருவார். (1)
 
2009-ல் அகில இந்திய பள்ளிகளுக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் சண்டேலா வெற்றி பெற்றார்.  உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்து வந்த அவர், 2012- ல் சீனியர் நேஷனல் ஷூட்டிங் சாம்பியன்ஷிப்பையும் வென்றார். 2012- 2019 தொடர்ந்து ஆறு முறை தேசிய அளவிலான போடியம் முடிதல்களில் பதிவு செய்துள்ளார் சண்டேலா.(2<ref>{{Cite web|url=http://dx.doi.org/10.3998/mpub.9853855.cmp.30|title=Joci Pápai, “Origo”|website=dx.doi.org|access-date=2021-02-17}}</ref>)
 
 
சண்டேலா அவரது ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் வாசிப்பதோடு, தனது பயிற்சிக்காக கவனத்தை மேம்படுத்த தியானம் மேற்கொள்வதும் வழக்கம். (2)
 
 
'''தொழில்முறை சாதனைகள்'''
 
2012 ஆம் ஆண்டு முதல் சண்டேலா துப்பாக்கிச் சுடும் போட்டியில்  தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். ஆனால்  2014-ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் அவரது முதல் சர்வதேச அளவிலான வெற்றியைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மேலும் அந்த வெற்றிதான் தனக்கு மறக்க முடியாத ஓர் நிகழ்வு எனவும், காரணம் தனது குடும்பத்தைச் சார்ந்த 14 பேர் மைதானத்தில் தன்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள் எனவும் சண்டேலா கூறினார்.  ஓராண்டிற்கு பிறகு சாங்வோனில் நிகழ்ந்த உலகக் கோப்பையில் அறிமுகமாகி அதில் வெண்கலப் பதக்கம் வென்றார்.(3)  இதனால் 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு அவர் தகுதி பெற்றார். ஆனால் அதில் 34 -வது இடத்தையே அடைந்தார் சண்டேலா. ஏமாற்றமடையும் தனது இந்த செயல்திறன் தனக்கு  மதிப்புமிக்க பாடத்தை வழங்கியதாக அவர் கூறினார். (1)   மேலும் அவர் வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் ஒன்றாக கருதி  மேற்கொண்டு முன்னேற கற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார். சண்டேலா, பெரிதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நபர் இல்லை என்பதால்,  போட்டிகளிலும் அவர் அப்படியே இருந்தார்.(3<ref>{{Cite web|url=https://www.olympicchannel.com/en/athletes/detail/apurvi-chandela/|title=Apurvi Chandela Biography, Records and Age|website=Olympic Channel|access-date=2021-02-17}}</ref>)
 
2018-ல் காமன்வெல்த் போட்டிகளில் சண்டேலா இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார். இருப்பினும் 2019-ல் புது டெல்லியில் நடந்த ஐ. எஸ். எஸ். எஃப்  உலகக் கோப்பை போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 252.9  புள்ளிகள் பெற்று புதிய சாதனை படைத்து,  தங்கப் பதக்கம் வென்றது அவரது தொழில்முறை வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமான ஆண்டாக மாறியது.  தனது நாட்டு மக்கள் முன்னிலையில் விளையாடுயது சற்று அழுத்தத்தைக் கொடுத்தாலும் அவர்களது கைத்தட்டல் அவரது ஒவ்வொரு முயற்சிக்கும் அவரை ஊக்கப்படுத்தியது என சண்டேலா கூறுகிறார். (4<ref>{{Cite web|url=http://dx.doi.org/10.3998/mpub.9853855.cmp.30|title=Joci Pápai, “Origo”|website=dx.doi.org|access-date=2021-02-17}}</ref>)
 
சண்டேலா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட ஒரு இடத்தை பெற்றுள்ளார். அவர் அங்கு இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் உள்ளார். 2020-ல் ஆஸ்திரியாவின் மெய்டன் காப்பில் நடைபெற்ற தனியார் போட்டிகளில் அவர் தங்கப் பதக்கம் வென்றார். (5<ref>{{Cite web|url=https://scroll.in/field/950630/shooting-apurvi-chandela-divyansh-pawar-win-gold-medals-in-meyton-cup|title=Shooting: Apurvi Chandela, Divyansh Pawar win gold medals in Meyton Cup|last=India|first=Press Trust of|website=Scroll.in|language=en-US|access-date=2021-02-17}}</ref>)
 
சண்டேலா 2016-ம் ஆண்டு இந்தியாவின் விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் அர்ஜூனா விருதை இந்தியக் குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றார். இதுவே அவரது விளையாட்டு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். (1)
 
 
வலது கைபக்க பெட்டி தகவல்:
 
பெயர்                  :  அபூர்வி சண்டேலா
 
பிறப்பு                  : 4 ஜனவரி 1993
 
                                  ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
 
குடியுரிமை       : இந்தியர்
 
விளையாட்டு  :  10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல்
 
 
'''பதக்கங்கள்'''
 
இந்தியாவை பிரதிநிதிப்படுத்தி:
 
1 தங்கப் பதக்கம், ஐ. எஸ். எஸ். எஃப்  உலகக் கோப்பை 2019,  புதுடெல்லி
 
 
1 தங்கப் பதக்கம், காமன்வெல்த் போட்டிகள் 2014, க்ளாஸ்கோவ்
 
 
1 வெண்கலம், காமன்வெல்த் போட்டிகள் 2018,  கோல்ட் கோஸ்ட்
 
 
1 தங்கப் பதக்கம், இந்தியன்  சீனியர் நேஷனல் ஷூட்டிங் சாம்பியன்ஷிப்  2012
 
 
'''விருதுகள்:'''
 
அர்ஜூனா விருது,  இந்தியா, 2016
 
 
'''சான்றாதாரங்கள்:'''
 
1. <nowiki>https://www.bbc.com/tamil/india</nowiki>
 
 
2. DD news <nowiki>https://www.youtube.com/watch?v=slgSzMAVvsE</nowiki>
 
3. <nowiki>https://www.olympicchannel.com/en/athletes/detail/apurvi-chandela/</nowiki>
 
4. DD news interview <nowiki>https://www.youtube.com/watch?v=j4kcyRZDlBQ</nowiki>
 
5. <nowiki>https://scroll.in/field/950630/shooting-apurvi-chandela-divyansh-pawar-win-gold-medals-in-meyton-cup</nowiki>
<references />
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1993 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியப் பெண்கள்]]
[[பகுப்பு: இந்திய விளையாட்டு வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அபூர்வி_சண்டேலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது