இந்திய ஒரு ரூபாய் தாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
சிNo edit summary
வரிசை 3:
'''இந்திய ஒரு ரூபாய் பணத்தாள்''' (Indian 1-rupee note) என்பது நூறு பைசாக்களை உள்ளடக்கியது. ஒரு ரூபாய் என்பது 100 பைசாக்கள். தற்போது இந்திய [[இந்திய அரசு|அரசால்]] வெளியிடப்பட்ட, புழக்கத்தில் உள்ள மிகச்சிறிய இந்திய ரூபாய் நோட்டு ஆகும்.புழக்கத்தில் உள்ள மற்ற அனைத்து நோட்டுகளும் [[இந்திய ரிசர்வ் வங்கி|இந்திய ரிசர்வ் வங்கியால்]] வழங்கப்படுகின்றன. ஒரு ரூபாய் தாள் நிதிச் செயலாளரின் கையொப்பத்தைக் கொண்டது. மற்ற பணத்தாள்களைப் போல ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கையெழுத்து இடம்பெறுவதில்லை. <ref name="RB1">{{Cite web|url=https://rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=40602|title=Issue of Re. 1 denomination currency notes with Rupee symbol (₹) and the inset letter 'L'|publisher=RBI|access-date=6 January 2018}}</ref>
 
==வரலாறு==
 
முதன்முதலில் 1917 நவம்பர் 30 அன்று [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அச்சடிக்கப்பட்டு, இந்தியாவில் புழக்கத்திற்கு வந்தது ஆகும். இந்த நோட்டின் மீது இங்கிலாந்து அரசர் [[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்|ஐந்தாம் ஜார்ஜ்]] மன்னரின் தலை முத்திரையிடப்பட்டிருந்தது. [[பிரித்தானிய இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியப் பேரரசில்]] வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயங்கள் [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]] நாணயங்களாக வெளியிடப்பட்டன. [[முதல் உலகப் போர்|முதல்]] மற்றும் [[இரண்டாம் உலகப் போர்]]களின் காரணமாக, வெள்ளிக்கு பற்றாக்குறை இருந்தது. இதனால் இந்த கால கட்டத்தில் வெள்ளி நாணயங்களுடன் ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டன. இதுவரை 44 முறை ஒரு ரூபாய் தாளின் நிறம், அளவு, அடையாளங்கள் ஆகியவற்றை [[இந்திய ரிசர்வ் வங்கி]] மாற்றி உள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/india/article21239184.ece | title=ஒரு ரூபாய் நோட்டுக்கு வயது 100 | publisher=தி இந்து தமிழ் | work=செய்தி | date=2017 திசம்பர் 1 | accessdate=3 திசம்பர் 2017 | author=என். மகேஷ்குமார்}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_ஒரு_ரூபாய்_தாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது