அம்மு சுவாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
 
== திருமணம் ==
ஒரு வழக்கறிஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட [[சென்னை|சென்னையைச்]]யைச் சேர்ந்த முனைவர் சுவாமிநாதன் என்பவர் இவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். நகரத்தில் தனக்கு முழு சுதந்திரம், ஒரு நல்ல கல்வி, நல்ல வாழ்க்கை ஆகியவை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று இவர் கூறினார். ஒரு பிராமண ஆணுக்கும் நாயர் பெண்ணுக்கும் இடையிலான வழக்கமான நடைமுறையில் இருந்த ஒரு [[சம்பந்தம்]] என்ற முறைசாரா திருமணத்தை செய்து கொள்ளவில்லை. ஆனால் ஒரு பாரம்பரிய நாயர் திருமணமாக இருந்தது. இதனால் பிராமணர்கள் இதை புறக்கணித்தனர்.
 
ஒரு கேரள ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த, [[எடின்பரோ பல்கலைக்கழகம்|எடின்பர்க்]] மற்றும் [[இலண்டன் பல்கலைக்கழகம்|லண்டன்]] பல்கலைக்கழகங்களில் உதவித்தொகையுடன் பயின்ற சுப்பராம சுவாமிநாதன், [[இலண்டன்|லண்டனில்]] உள்ள ஒரு பதிவு அலுவலகத்தில் அம்முவை முறையாக திருமணம் செய்து கொண்டார். 13 வயதான அம்முவைவிட சுவாமிநாதன் 20 வயது மூத்தவராக இருந்தார்.
 
== தொழில் ==
அம்முவின் வாழ்க்கை தனது கணவரின் துணையால் மாறியது. சுவாமிநாதன் தனது மனைவியின் திறமைகளை ஊக்குவித்தார். அவருக்கு ஆங்கிலம் மற்றும் பிற பாடங்களை வீட்டிலேயே கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தார். பின்னர், அம்மு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தியைப்]] பின்பற்றுபவராகி இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். சுதந்திரத்திற்குப் பிறகு1936 ஆம் ஆண்டில், இவர் இந்திய தேசிய காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்ய இந்தியா முழுவதும் பயணம் செய்தார். வெள்ளையனே வெளியேறு இந்தியா இயக்கம் தொடர்பாக இவர் 1942 இல் கைது செய்யப்பட்டார். இவர் 1947 இல் அமைக்கப்பட்ட [[இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்|இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின்]] உறுப்பினராக பணியாற்றினார்.
 
1952 ஆம் ஆண்டில், [[சென்னை மாநிலம்|சென்னை மாநிலத்திலிருந்து]] [[மாநிலங்களவை]] உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பல கலாச்சார மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். இந்தியாவின் முதல் பெண்கள் அமைப்பான மெட்ராஸ் பெண்கள் சங்கத்தின் ஆர்வலரானார். மேலும் [[இந்திய சாரணர் சங்கம்|இந்திய சாரணர் சங்கத்தின்]] தலைவராக 1960 நவம்பர் முதல் 1965 மார்ச் வரை பணியாற்றினார். 1975 [[அனைத்துலக பெண்கள் நாள்|அனைத்துலக பெண்கள் ஆண்டின்]] தொடக்க விழாவில் இவர் 'ஆண்டின் தாய்' ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
== குடும்பம் ==
"https://ta.wikipedia.org/wiki/அம்மு_சுவாமிநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது