பரமஹம்சதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==படைப்புகள்==
[[இரவீந்திரநாத் தாகூர்|மகாகவிதாகூர்]] பாடிய (Fruit Gathering) ‘கனிகொய்தல்’ என்ற கவிதை நூலையும், கீதாஞ்சலியையும் மரபுக்கவிதை வடிவில் தமிழுக்குத் தந்த தகைசால் பெருங்கவிஞர் இவர். இவற்றுள் ‘கனிகொய்தல்’ நூலைத் ‘தீங்கனிச்சோலை’ என்ற பெயரில் இலங்கை நாவலப்பிட்டி ஆத்மஜோதி நிலையம், 1963இல் பதிப்பித்து வெளியிட்டது மகாகவி தாகூரின் தீங்கனிச்சோலை (Fruit Gathering) நூலும் கவிதை மணிமாலை என்னும் அளவால் சிறிய நூலும் தவிர, அக்கால இதழ்களில் வெளிவந்தவையும், கையெழுத்துப் பிரதிகளாக உள்ளவையுமான பிற கவிதைகள் மூன்று தொகுப்புகளாக, தேசியக் கவிதைகள், பக்திக்கவிதைகள், பல்சுவைக் கவிதைகள் என்ற பகுப்புகளில் வெளியிடப் பெற்றுள்ளன. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனக் கவிஞர் மரு.பரமகுரு இத்தொகுப்புகளின் பதிப்பாசிரியர் ஆவார். இத்தொகுப்புகளுக்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கிருங்கை சேதுபதி ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
 
1962இல் தமிழகம் வந்த கவிஞர் பரமஹம்சதாசன் நீண்ட நாட்கள் உடல் நலம் குன்றியிருந்து தமது 49ஆவது வயதின் தொடக்கத்தில் 1965 சனவரியில் அவர் சொந்த ஊரான அதிகரத்தில்அதிகாரத்தில் காலமானார். அவர் இல்லத்தோட்டத்தில் அவரது திருவுடல் அடக்கம் செய்யப்பெற்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பரமஹம்சதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது