"ராஜேஸ் தாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
'''ராஜேஸ் தாஸ்''' தமிழ்நாட்டில் பணிபுரியம் [[ஒடிசா]] மாநிலத்தைச் சேர்ந்த [[இந்திய ஆட்சிப் பணி]] அதிகாரி ஆவார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த [[இந்திய ஆட்சிப் பணி]] அதிகாரியான [[பீலா ராஜேஷ்|பீலா ராஜேசை]] மணந்தவர். இவர் பிப்ரவரி, 2021 முடிய தமிழக காவல் துறையில் சிறப்பு தலைமை இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) பணியில் இருந்தவர். 2021-இல் 57 வயதாகும் இராஜேஸ் தாஸ் மீது ஒரு பெண் [[இந்தியக் காவல் பணி]] அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் செய்தமை குறித்து குற்றச்சாட்டு எழுந்தது. எனவே தமிழ்நாடு காவல் துறை, ராஜேஸ் தாஸ் மீது பாலியல் துன்புறத்தல் வழக்கு பதிந்து, தமிழக சிபி-சிஐடியின் கண்காணிப்பாளர் முத்தரசி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.bbc.com/tamil/india-56249048 பெண் எஸ்பி பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபியை விசாரிக்க பெண் எஸ்பி நியமனம்]</ref><ref>[https://www.thenewsminute.com/article/cb-cid-probe-sexual-harassment-charges-against-tn-dgp-rajesh-das-144353 CB-CID to probe sexual harassment charges against TN DGP Rajesh Das]</ref><ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/mar/01/former-tamil-nadu-senior-cop-rajesh-das-booked-by-cb-cid-for-sexual-harassment-of-officer-2270335.html Former Tamil Nadu senior cop Rajesh Das booked by CB-CID for sexual harassment of officer]</ref><ref>[https://www.thenewsminute.com/article/cb-cid-probe-sexual-harassment-charges-against-tn-dgp-rajesh-das-144353 CB-CID to probe sexual harassment charges against TN DGP Rajesh Das]</ref><ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/mar/01/former-tamil-nadu-senior-cop-rajesh-das-booked-by-cb-cid-for-sexual-harassment-of-officer-2270335.html Former Tamil Nadu senior cop Rajesh Das booked by CB-CID for sexual harassment of officer]</ref> தற்போது ராஜேஸ் தாஸ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இராஜேஸ் தாஸ் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை தன்னிச்சையாக கையில் எடுத்த [[சென்னை உயர் நீதிமன்றம்]], இந்த விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலகம், ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் துன்புறத்தல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய ஒரு பெண் கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஆறு பேர் கொண்ட [[விசாகா வழிகாட்டுதல்கள்|விசாகா குழு]] அமைக்கப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3113947" இருந்து மீள்விக்கப்பட்டது