"காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
இரண்டாவது கட்டமாக, [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[சிவகங்கை மாவட்டம்]], [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டங்களில்]] உள்ள 220 ஏரிகளும், 23,245 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும் வகையில் [[வெள்ளாறு (தெற்கு)|தெற்கு வெள்ளாற்றிலிருந்து]] 109 கிமீ நீளத்திற்கு புதிய பாசனக் கால்வாய்களை உருவாக்கி [[வைகை ஆறு|வைகை ஆற்றுடன்]] இணைக்கப்படுகிறது.
 
மூன்றாவது கட்டத்தில், [[விருதுநகர் மாவட்டம்]] மற்றும் [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டங்களில்]] 492 ஏரிகள் மற்றும் 44,547 ஏக்கர் நிலங்களும் பயன் பெறும் வகையில் 34 கிமீ நீளத்திற்கு புதிய பாசானக் கால்வாய்களை வெட்டி [[வைகை ஆறு]] முதல் [[ [[குண்டாறு (தேனி)|குண்டாறு]] வரை இணைக்கப்படுகிறது. இதற்கு [[ரூபாய்]] 14,400 [[கோடி]]யில் 262 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிறைவேற்றப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6,300 மில்லியன் கனஅடி தண்ணீர் ஆக்கப்பூர்வமாக திருப்பப்படுவதால் தென் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகரிப்பதோடு, குடிநீர் தேவையும் நிறைவடையும்.
 
மேலும் காவேரி துணை வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4,67,345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும்.<ref>[https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-gundaru-river-link-project-how-it-will-be-benefited-248624/ காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3113982" இருந்து மீள்விக்கப்பட்டது