பாகன் செராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 56:
 
அவ்வாறு கொண்டு வரப்பட்ட தமிழர்கள் ஒப்பந்தக் காலம் முடிந்ததும்; அவர்களுக்கு நிலம் வழங்கி அதில் வீடு கட்டிக் கொள்ளவும்; காய்கறிகள் பயிரிட்டுக் கொள்ளவும் ஓர் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது. அந்த வகையில் முதல் தமிழர் குடியிருப்புப் பேட்டை இந்தப் பாகன் செராய் இடத்தில் தான் வழங்கப்பட்டது. மலாயா தமிழர்கள் வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்று சொல்லப் படுகிறது.<ref>[http://tikpanbaham.blogspot.com/2016/12/blog-post.html தமிழர் குடியிருப்புப் பகுதி முதலில் எங்கே ஓர் ஊராகத் தொடங்கப்பட்டது?]</ref> 1884-ஆம் ஆண்டு 700 ஏக்கர் நிலத்தில் 400 தமிழர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்து ஏக்கர் நிலம் கிடைத்தது.
 
[[நெகிரி செம்பிலான்]] மாநிலத்திலும் இவ்வாறு ஒப்பந்த முறையில் கொண்டு வரப்பட் தமிழர்களுக்கும் நிலம் வழங்கப்பட்டது. 1932-ஆம் ஆண்டில் இராமநாதபுரம் (சுவா) என்ற கிராமத்தில் 243 ஏக்கர் நிலம் தரப்பட்டது. அப்போது அங்கு வாழ்ந்த தமிழர்கள் அவர்களின் தமிழக மாவட்டத்தின் பெயர் இராமநாதபுரம் என்பதையே இங்கும் வைத்தனர். ரப்பர் தோட்டங்களில் 20 ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டது.
 
[[தீபகற்ப மலேசியா]]வில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் பாகன் செராய் நகரமும் ஒன்றாகும். இந்தியர்கள் கிராமம் (Kampung India) எனும் பெயரில் இங்கு ஒரு கிராமம் உள்ளது.<ref>[https://postcode.my/perak-bagan-serai-kampung-india-34300.html Kampung India, Bagan Serai]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாகன்_செராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது