மங்கலதேவி கண்ணகி கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
மதுரை மாநகருக்குத் தனது கணவனுடன் கண்ணகி கிழக்கு வாயில் வழியாக நுழைந்தாள். அதன் பின்னர், தனது கணவனை இழந்த கண்ணகி பாண்டியனையும், மதுரையையும் அழித்துவிட்டு மிகுந்த வெறுப்புணர்வுடன் மதுரையின் மேற்கு வாயில் வழியாக மனமுடைந்த நிலையில் தன்னந்தனியாய் மாமதுரையை விட்டுப் புறப்படுகிறாள். (சிலம்பு 53:183) அதன் பின்னர் வையை ஆற்றின் தென் கரையைப் பற்றி மேற்கு நோக்கி நடக்கிறாள் (சிலம்பு 23:185). அவ்வாறு நடந்தவள் வையை ஆறு பரவிப்பாயும் இடமாகிய சுருளிமலைத் தாழ்வாரம் தொடராம் நெடுவேள் குன்றத்தில் அடிவைத்து ஏறி வந்து (சிலம்பு 23:190), மலை மீது இருந்த பூக்கள் பூத்துக் குலுங்கும் மூங்கில் புதர்கள் அடர்ந்த வேங்கைக் கானலில் வந்து நின்று (சிலம்பு 23:191) தெய்வமாகிறாள் (சிலம்பு 24:3). இத்தகையக் காட்சியினைக் குன்றக் குறவர்கள் நேரில் கண்டு அவளைத் தெய்வமாகப் போற்றினர் (சிலம்பு 24: 14, 15). குன்றக் குறவர்கள் இக்காட்சியினை மலைவளம் காண்பதற்காக வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் கூறினர். மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் குன்றக் குறவர்கள் கூறியதைத் தாமும் கண்டதாகக் கூறினார். அதனைக் கேட்ட சேரன் செங்குட்டுவனும் அவன் மனைவியும் கண்ணகிக்குக் கோயில் கட்டத் தீர்மானிக்கின்றனர். அதற்காக இமயமலை சென்று அங்கிருந்து கல்லெடுத்து வந்து இக்கோயிலை அமைத்தான். <ref>வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம், கவிஞர் இரா. கணபதிராசன் (எ) தமிழாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை (ISBN: 978-93-8897-304-5) மார்ச், 2019, பக் 35, 36, 37</ref>
 
==மங்கலதேவி பெயர்க்காரணம்==
 
சுமங்கலி பெண்ணானவள் கணவனை இழந்தவுடன் அமங்கலியாகிறாள். அப்படியாயின் கண்ணகி எங்ஙனம் மங்கலதேவியாவாள்? என்கிற வினா அனைவரிடமும் எழும். கணவனை இழந்து கணவன் மீது சுமத்தப்பெற்ற பழியை நீக்கி மதுரையை எரித்துவிட்டு வந்த கண்ணகியைக் கோவலன் மங்கல மடந்தையாக்குகிறான். அவ்வாறு கோவலனால் மீண்டும் மங்கல மடந்தையாக்கப்பெற்று விண்ணுலகெய்திய கண்ணகியே மங்கலம் தரும் மங்கலதேவியாக அனைத்து மக்களாலும் வழிபடப்பட்டுவருகிறாள். விண்ணுலகிலிருந்து பூப்பல்லக்கில் தேவர்களுடன் வந்த கோவலன் கண்ணகிக்கு மங்கலநாண் அணிவித்து விண்ணுலகுக்கு அழைத்துச் சென்றதால் கண்ணகியை மக்கள் மங்கலதேவி என்று அழைக்கிறார்கள். <ref>வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம், கவிஞர் இரா. கணபதிராசன் (எ) தமிழாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை (ISBN: 978-93-8897-304-5) மார்ச், 2019, பக் 33</ref>
 
==துர்க்கையம்மன் கோயில்==
"https://ta.wikipedia.org/wiki/மங்கலதேவி_கண்ணகி_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது