நியூயார்க்கு நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed the file syntax error.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி இணைப்பு கொடுத்தல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 110:
|footnotes =
}}
'''நியூயார்க்கு நகரம்''' (ஆங்கிலம்: New York City; [[இலங்கை]] வழக்கு: '''நியூ யோர்க்''') [[ஐக்கிய அமெரிக்கா]]வில் மிகக்கூடுதலான [[மக்கள் தொகை|மக்கள் தொகையுடைய]] [[நகரம்|நகரமாகும்]]. இங்கு [[உலகம்|உலகெங்குமிருந்து]] குடிபெயர்ந்த மக்கள் வாழ்வதால் இந்த நகரத்தின் தாக்கம் [[வணிகம்]], நிதி, பண்பாடு, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் உலகளாவிய அளவில் கூடுதலாகும். இங்கு [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] தலைமையகம் அமைந்திருப்பதால் பன்னாட்டு [[அரசியல்|அரசியலில்]] சிறப்பு இடத்தை வகிக்கிறது. இதே பெயரிலுள்ள [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்திலிருந்து]] வேறுபடுத்தி காட்டுவதற்காக ''நியூயார்க்கு நகரம்'' என்று '''நகரம்''' என்ற சுட்டுச்சொல்லுடன் அடிக்கடி குறிக்கப்படுகிறது.
 
[[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|ஐக்கிய அமெரிக்காவின்]] வடகிழக்கில் [[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அட்லாண்டிக்]] கரையோரம் பெரிய இயற்கை துறைமுகமாக அமைந்துள்ள இந்நகரம் [[பிரான்க்சு]], [[புருக்ளின்]], [[மேன்காட்டன்]], [[குயின்சு]], [[ஸ்டேட்டன் தீவு]] ஆகிய (மாவட்டங்களுக்கு இணையான) ஐந்து ''பரோ''க்களால் ஆனது. 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8.3 மில்லியனுக்கும் கூடுதலாகும்.<ref name="2008 Census population">{{cite web |url=http://www.census.gov/popest/cities/SUB-EST2008.html |title=Vintage 2008 Population Estimates: Incorporated Places and Minor Civil Divisions over 100,000 |accessdate=2009-07-02 |publisher=United States Census Bureau, Population Division}}</ref> இதன் நிலப்பரப்பு 305 சதுர மைல்களாகும் (790 சதுர கிமீ).<ref name="NYC Land Estimate">{{cite web |publisher=New York City Department of City Planning |title=NYC Profile |url=http://home2.nyc.gov/html/dcp/pdf/lucds/nycprofile.pdf |accessdate=2008-05-22|format=PDF}}</ref><ref name="NYT Land Estimate">{{cite news |publisher=''[[த நியூயார்க் டைம்ஸ்]]'' (May 22, 2008) |title=It’s Still a Big City, Just Not Quite So Big |first=Sam |last=Roberts |url=http://www.nytimes.com/2008/05/22/nyregion/22shrink.html |accessdate=2008-05-22}}</ref> நியூயார்க்கு நகரம் ஐக்கிய அமெரிக்காவிலேயே மக்களடர்த்தி மிக்க இடமாகும்<ref>{{cite web |url=http://www.demographia.com/db-2000city50kdens.htm |title=2000 Census: US Municipalities Over 50,000: Ranked by 2000 Density |publisher=Demographia |accessdate=2008-09-01}}</ref>. 18.8 மில்லியனாக மதிப்பிடப்படும் பெருநகர நியூயார்க்குப் பகுதியின் மக்கள் தொகை நாட்டிலேயே மிகவும் அதிகமானதாகும்.<ref>{{cite web|url=http://www.census.gov/popest/metro/files/2007/CBSA-EST2007-alldata.csv|publisher=U.S. Census Bureau |title=Annual Estimates of the Population of Metropolitan Statistical Areas: April 1, 2000 to July 1, 2007|accessdate=2008-12-30}}</ref> பெருநகர நியூயார்க்கின் நிலப்பரப்பு 6,720 சதுர மைல்களாகும் (17,400 சதுர கிமீ).
 
நியூயார்க்கு [[நெதர்லாந்து|டச்சுகாரர்களால்]] 1624ல் வணிக துறைமுகமாக உருவாக்கப்பட்டது. 1664ல் ஆங்கிலேயர்களின் கைக்கு இக்குடியேற்றம் மாறும் வரை '''நியு ஆம்ஸ்டர்டாம்''' என்று அழைக்கப்பட்டு வந்தது<ref>{{cite book |last= Shorto|first= Russell|title= The Island at the Center of The World, 1st Edition |year= 2005|publisher= Vintage Books|location=New York |isbn= 1-4000-7867-9|page=30}}</ref>. 1785லிருந்து 1790வரை இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் [[தலைநகரம்|தலைநகராக]] செயல்பட்டது <ref name=senate>{{cite web|url=http://www.senate.gov/reference/reference_item/Nine_Capitals_of_the_United_States.htm|title=The Nine Capitals of the United States |publisher=[[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)]]|accessdate=2008-09-07}}</ref>. 1790லிருந்து இதுவே அமெரிக்காவின் பெரிய நகராக இருந்து வருகிறது <ref>{{cite web|url=http://www.census.gov/population/www/documentation/twps0027/tab01.txt|title=Rank by Population of the 100 Largest Urban Places, Listed Alphabetically by State: 1790–1990|date=1998-06-15|publisher=U.S. Census Bureau|accessdate=2009-02-08}}</ref>.
 
இந்நகரில் உள்ள பல இடங்கள் உள்ளூர் மக்கள் மற்றும் அன்றி வெளியூர் மக்களாலும் நன்கு அறியப்பட்டதாகும். 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பல மில்லியன் கணக்கான குடியேற்றவாதிகளை [[சுதந்திரச் சிலை|சுதந்திரதேவி சிலை]] வரவேற்றது. கீழ் மேன்காட்டன் பகுதியில் உள்ள [[வால் தெரு]] இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆதிக்கம் மிகுந்த உலக நிதி மையமாக திகழ்கிறது, இங்கு [[நியூயார்க் பங்குச் சந்தை]] அமைந்துள்ளது. உலகின் பல உயரமான கட்டடங்கள் இந்நகரில் உள்ளன. புகழ் பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடம் இங்குள்ளது, உலக வணிக மைய இரட்டைக்கோபுர கட்டடங்கள் இங்கிருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/நியூயார்க்கு_நகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது