பொம்பெயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
==தொல்லியல் ஆய்வுகள்==
கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் பாம்பேய் நகரம் மூழ்கிப் போனது. அப்பகுதி இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது. டிசம்பர், 2020-இல் பொம்பெயி நகரத்தை [[அகழ்வாய்வு]] செய்த போது, 'ஃப்ரெஸ்கோஸ்' என்றழைக்கப்படும், ஈரமான சுண்ணாம்புக் கல் மீது வரையப்படும் ஒரு வகையான ஓவியங்கள் மற்றும் சுடுமண் பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.மேலும் இந்நகத்தின் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியத்தில் காணப்படும் படங்கள் மூலம் இந்நகரத்தின் துரித உணவகத்தில் வழங்கப்பட்ட உணவுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. பன்றி இறைச்சி, மீன், நத்தை, மாட்டிறைச்சி போன்ற இறைச்சிகள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாத்திரங்களில் காணப்படுகின்றன.<ref>[https://www.bbc.com/tamil/global-55457277 ரோமப் பேரரசு வரலாறு: 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாம்பேய் நகர 'ஃபாஸ்ட் ஃபுட்' கடை கண்டுபிடிப்பு]</ref>நவம்பர் 2020 மாத ஆய்வில் பாம்பேய் தொல்பொருள் ஆய்வில் எரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.<ref>[https://www.bbc.com/tamil/global-55032875 பாம்பேய் தொல்பொருள் ஆய்வு: எரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை உடல்கள்]</ref> எரிமலைச் சாம்பலில் புதைந்து கிடக்கும் பாம்பேய் நகரத்தின் மூன்றில் ஒரு பகுதி, இன்னும் ஆராய்ச்சி செய்யப்படாமல் இருக்கிறது.
 
 
இத்தாலியில் பண்டைய ரோமப் பேரரசு கால நகரமான பாம்பேய்க்கு அருகில் ஒரு விழாக்கால தேரைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
நான்கு சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குதிரை லாயத்தில் இருந்துதான் கடந்த 2018-ம் ஆண்டு மூன்று குதிரைகளின் எச்சங்களை வெளியே எடுத்தார்கள். பண்டைய பாம்பேய் நகரின் வடக்கு எல்லையில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில் இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<ref>[https://www.bbc.com/tamil/arts-and-culture-56229384 ரோமப் பேரரசு வரலாறு: 2000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொம்பெயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது