தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
→‎top: *திருத்தம்*
வரிசை 10:
வைரசு என்ற சொல் பொதுவாக [[மெய்க்கருவுயிரி]]யைத் தாக்கும் துகள்களைக் குறிப்பதாக இருக்கிறது. [[நிலைக்கருவிலி]]களைத் தாக்கும் துகள்கள் அல்லது வைரசு [[நுண்ணுயிர் தின்னி]] என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. [[புகையிலை]]யைப் பாதித்த பாக்டீரியா அல்லாத [[நோய்க்காரணி]]யைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்.<ref>* Dimmock, N.J; Easton, Andrew J; Leppard, Keith (2007) ''Introduction to Modern Virology'' sixth edition, Blackwell Publishing, {{ISBN|1-4051-3645-6}}.</ref> சுமார் 6,000 வைரசு [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.<ref name = ictv2019>{{cite web|url=https://talk.ictvonline.org/taxonomy/|title=Virus Taxonomy: 2019 Release|website=talk.ictvonline.org|publisher=International Committee on Taxonomy of Viruses|access-date=25 April 2020}}</ref><ref name="Dimmock p. 49">Dimmock p. 49</ref> இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.<ref name="Breitbart M, Rohwer F 2005 278–84">{{cite journal|author=Breitbart M, Rohwer F|title=Here a virus, there a virus, everywhere the same virus?|journal=Trends in Microbiology |volume=13|issue=6|pages=278–84|year=2005|pmid=15936660|doi=10.1016/j.tim.2005.04.003}}</ref> [[பூமி]]யிலுள்ள ஒவ்வொரு [[சூழல் மண்டலம்|சூழல் மண்டலத்திலும்]] வைரசுகள் காணப்படுகின்றன. மேலும் மிக அதிகமான [[உயிரியல்]] வகைகளைக் கொண்ட உயிரினமாகவும் வைரசு அறியப்படுகிறது <ref> Lawrence CM, Menon S, Eilers BJ, et al.. Structural and functional studies of archaeal viruses. The Journal of Biological Chemistry. 2009;284(19):12599–603. doi:10.1074/jbc.R800078200. {{PMID|19158076}}.</ref>. வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலின்]] துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.
 
ஒரு வைரசைனால் [[நோய்த்தொற்று|தொற்று]]க்குட்படும் ஓம்புயிரானது, அசல் வைரசை ஒத்த ஆயிரக் கணக்கான பிரதிகளை உருவாக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறது. தொற்றுக்குட்பட்ட உயிரணு ஒன்றிற்குள் இல்லாத நேரங்களில், அல்லது உயிரணுவில் தொற்றை ஏற்படுத்தும் செயல்பாட்டில் இருக்கும் வேளையில், வைரசுகள் சுயாதீனமான துகள்களாக இருக்கின்றன. அந்த நிலையில் அவை வைரியன் (virion) என்று அழைக்கப்படும். அப்போது அவை இரண்டு அல்லது மூன்று [[மூலக்கூறு]]களைக் கொண்டிருக்கும். அவையாவன:
* [[மரபியல்]] கூறான, நீண்ட மூலக்கூறாலான [[கருவமிலம்]] - [[டி. என். ஏ.|டி.என்.ஏ.]] அல்லது [[ஆர்.என்.ஏ]] காணப்படும்.
* இந்த மரபியல் பொருளைச் சூழ்ந்து, அதைப் பாதுகாக்கும் [[புரதம்|புரதத்தாலான]] ஒரு புரதப்பூச்சுபுரதப்பேழை ([[:en:Capsid]]) காணப்படும்.
* சில வைரசுக்களில் இந்தப் புரத உறைக்குபுரதப்பேழைக்கு மேலாக [[கொழுமியம்|கொழுமியத்தினாலான]] (இலிப்பிட்டு) ஒரு உறை காணப்படும்.
 
இந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேறுபடுகின்றன. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசானது வைரியன் எனப்படும் சுயாதீனமான துகளாக இருக்கும்போது ஒளியியல் நுண்நோக்கிகளால்கூடப்[[நுண்நோக்கி]]களால்கூடப் பார்க்க முடியாத அளவிற்குச் சிறியனவாக இருக்கும். காரணம் அவை அநேகமான பாக்டீரியாவின் அளவுடன் ஒப்பிடுகையில், அவற்றின் அளவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன.
 
வாழ்வின் [[பரிணாம வளர்ச்சி|பரிணாம அல்லது படி வளர்ச்சி வரலாற்றில்]] வைரசுகளின் தோற்றம் குறித்துத் தெளிவாக இல்லை. இவை உயிரணுக்களுக்கிடையில் நகரும் தன்மைகொண்ட டி.என்.ஏ.யான [[கணிமி]]களில் (plasmid) இருந்தோ அல்லது பாக்டீரியாக்களில் இருந்தோ தோன்றியிருக்கலாம். பரிணாமபடி வளர்ச்சியில் கிடைமட்ட மரபணுக் கடத்தலிற்கான (அதாவது பெற்றோரிலிருந்து சந்ததிக்கு மரபணு கடத்தப்படுவது போலன்றி, ஒருகல, பல்கல வெவ்வேறு உயிரினங்களுக்கிடையில் மரபணுப் பரிமாற்றம் நிகழ்வது) முக்கிய வழிமுறையாக வைரசுகள் செயல்படுகின்றன. அதனால் இவை [[பாலியல் இனப்பெருக்கம்|பாலியல் இனப்பெருக்கத்தில்]] போன்று [[மரபியற் பல்வகைமை]]யைக் கூட்டுவதில் உதவுகின்றன.<ref name="Canchaya">{{cite journal|author=Canchaya C, Fournous G, Chibani-Chennoufi S, Dillmann ML, Brüssow H|title=Phage as agents of lateral gene transfer|journal=Current Opinion in Microbiology |volume=6 |issue=4 |pages=417–24 |year=2003 |pmid=12941415|doi=10.1016/S1369-5274(03)00086-9}}</ref>
 
வைரசுகளை ஒரு சிலர் ஓர் உயிரினமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவை [[மரபணு]] மூலப்பொருட்களை எடுத்துச்செல்கின்றன, ஏதோ ஒரு முறையில் [[இனப்பெருக்கம்]] செய்கின்றன மற்றும் இயற்கை[[இயற்கைத் தேர்வு]] மூலம் உருவாகின்றன. இருப்பினும் பொதுவாக உயிரினம் என்று எண்ணப்படுவதற்கு ஆதாரமான உயிரணுக் கட்டமைப்பு போன்ற முக்கிய பண்புகளை இவை பெற்றிருக்கவில்லை. உயிரினங்கள் என்பதற்கான சில பண்புகளை கொண்டிருந்தாலும் அனைத்து குணங்களும் இல்லாததால், வைரசுகள் வாழ்க்கை விளிம்பு உயிரினங்கள் <ref> name="ReferenceA">{{vcite journal|author = Rybicki, EP|year = 1990|title = The classification of organisms at the edge of life, or problems with virus systematics|journal = South African Journal of Science |volume = 86|pages = 182–186}}</ref> மற்றும் பிரதிபலிப்புகள் <ref>{{cite journal |title=Are viruses alive? The replicator paradigm sheds decisive light on an old but misguided question |journal=Studies in history and philosophy of biological and biomedical sciences |volume=59 |pages=125–34 |date=7 March 2016 |last=Koonin |first=E. V. |last2=Starokadomskyy |first2=P. |doi=10.1016/j.shpsc.2016.02.016 |pmid=26965225}}</ref> என விவரிக்கப்படுகின்றன.
 
== இனப்பெருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது