வி. ராமசுப்பிரமணியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்புகள் இணைப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

06:36, 4 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

நீதியரசர் வி. ராமசுப்பிரமணியன் (பிறப்பு 30 ஜூன் 1958) என்பவர் தமிழ் நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். இவர், இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆக பணி செய்தவர் ஆவார். இவர் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். [1]

மாண்புமிகு
வி. ராமசுப்பிரமணியன்
நீதியரசர் இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 செப்டம்பர் 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம்நாத் கோவிந்த்
தலைமை நீதிபதி ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில்
22 ஜூன் 2019 – 22 செப்டம்பர்r 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம்நாத் கோவிந்த்
நீதிபதி தெலுங்கானா உயர் நீதிமன்றம்
பதவியில்
27 ஏப்ரல் 2016 – 21 ஜூன் 2019
பரிந்துரைப்புடி. எஸ். தக்கூர்
நியமிப்புபிரணாப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சூன் 1958 (1958-06-30) (அகவை 65)
சென்னை
முன்னாள் கல்லூரிராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி
இணையத்தளம்www.sci.gov.in

இளம் வயது மற்றும் கல்வி

நீடியரசர் வி. ராமசுப்ரமணியன், சென்னையில் கடந்த ஜூன் 30, 1958 இல் பிறந்தார். அவர், சென்னையில் உள்ள விவேகானந்தர் கல்லூரியில் பி.எஸ்சி தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர், பிப்ரவரி 16, 1983 அன்று மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.

வழக்கறிஞராக

பிறகு, மெட்ராஸ் உயர் நீதிமன்றம், நகரம் மற்றும் சிறிய வழக்குகள் நீதிமன்றம், மாநில நுகர்வோர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் மன்றம், மத்திய மற்றும் மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள், சென்னை, சிவில் மற்றும் அரசியலமைப்பு விஷயங்களில் மற்றும் சேவை விஷயங்களில் வழக்கறிஞராக ணிபுரிந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக

நீதியரசர் வி. ராமசுப்ரமணியன், கடந்த ஜூலை 31, 2006 அன்று மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டர்.

பின்னர் அவர், கடந்த நவம்பர் 9, 2009 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக

நீதியரசர் வி. ராமசுப்ரமணியன், தனது சொந்த வேண்டுகோளின் பேரில் ஹைதராபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்காக மாற்றப்பட்டார். ஏப்ரல் 27, 2016 முதல் அவரது பணிமாறுதல் அமல்படுத்தப்பட்டது. ஆந்திர மாநிலத்திற்கு பிரிக்கப்பட்டு தனி உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்ட பின்னர், ஹைதராபாத்தில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக தக்கவைக்கப்பட்டார்.

ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபத்தியாக

நீதியரசர் வி. ராமசுப்ரமணியன், கடந்த ஜனவரி 1, 2019. ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2019 ஜூன் 22 அன்று பதவியேற்றார்.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக

நீதியரசர் வி. ராமசுப்ரமணியன், இந்திய மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட பின்னர், கடந்த 23.09.2019 நியமிக்கப்பட்டர்.

மேற்கோள்கள்

  1. Krishnan, Murali (19 June 2019). "Centre clears appointment of Justice V Ramasubramanian as Chief Justice of Himachal Pradesh High Court". Bar & Bench. https://www.barandbench.com. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ராமசுப்பிரமணியன்&oldid=3128539" இலிருந்து மீள்விக்கப்பட்டது