"சிமுகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
{{சாதவாகனர்}} நானேகத்திலுள்ள சாதவாகனக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் மன்னர்களின் பட்டியலில் இவர் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.<ref name="Trübner & Company2" /> வெவ்வேறு புராணங்களில் ஆந்திர வம்சத்தின் நிறுவுனரின் பெயர் வெவ்வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்சய புராணத்தில் சிசுக எனவும், விசுணு புராணத்தில் சிப்ரக எனவும், வாயு புராணத்தில் சிந்துக எனவும், பிரம்மாண்ட புராணத்தில் சேசுமக எனவும், கந்த புராணத்தின் குமாரிக காண்டத்தில் சுத்ரக அல்லது சுரக எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref name="HHW_18682">{{cite book|url=https://books.google.com/books?id=rqk9AAAAcAAJ&pg=PA194|title=The Vishnu Purana|volume=IV|translator=H. H. Wilson|editor=Fitzedward Hall|publisher=Trübner & Co|year=1868|pages=194–202}}</ref> இப்பெயர்கள் ஓலைச் சுவடிகளைப் படியெடுத்தல் மற்றும் மீள்படியெடுத்தல் மூலமாகச் சிதைவுற்ற "சிமுக" எனும் பெயரின் உச்சரிப்புக்களாக நம்பப்படுகிறது.<ref name="Ajay Mitra Shastri 1998 422" />
 
மத்சய மற்றும் வாயு புராணங்கள், கண்வ அரசன் சுசர்மனை (கி.மு. அண். 40-30) முதலாவது ஆந்திர அரசன் வீழ்த்தியதாகக் குறிப்பிடுகின்றன. இம் மன்னனை சிமுகன் எனக் கருதும் சில அறிஞர்கள் சிமுகனின் ஆட்சி கி.மு. 30ல் துவங்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.<ref name="TPV2" /> D.C. சர்கார், H.C. ராய்சௌதரி மற்றும் ஏனைய சில அறிஞர்கள் இக்கொள்கையை ஆதரிக்கின்றனர்.<ref name="SC_19742">{{cite book|url=https://books.google.com/books?id=78I5lDHU2jQC&pg=PA37|title=Some Early Dynasties of South India|author=Sudhakar Chattopadhyaya|publisher=[[Motilal Banarsidass]]|year=1974|pages=17–56|isbn=9788120829411}}</ref>
 
ஆந்திர வம்சம் 450 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாக மத்சய புராணம் குறிப்பிடுகிறது. சாதவாகன ஆட்சி கி.பி. 3ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை தொடர்ந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. எனவே, சாதவாகன ஆட்சியின் துவக்கம் கி.மு. 3ம்-2ம் நூற்றாண்டெனத் துணியலாம். மேலும், மெகெசுதெனிசின் (கி.மு. 350 - 290) ''இண்டிகா'' நூலில் "ஆந்தரே" எனும் வலிமைமிக்க குடியைப் பற்றியும் அதன் மன்னன் 100,000 போர்வீரர்கள், 2,000 குதிரைகள் மற்றும் 1,000 யானைகள் அடங்கிய படையொன்றைப் பேணிவந்தமை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ் ஆந்தரே வம்சம் ஆந்திரர்களாக இருப்பின், இக்குறிப்பு சாதவாகன ஆட்சி கி.மு. 3ம் நூற்றாண்டில் துவங்கியமைக்கான மேலதிக சான்றாக அமையும். இக்கொள்கையின் அடிப்படையில், சிமுகன் மௌரியப் பேரரசன் அசோகனின் (கி.மு. 304–232) பின் உடனடியாக ஆட்சிக்கு வந்துள்ளான். இவ் அறிஞர்களின் கருத்துப்படி, கண்வ ஆட்சியாளன் சுசர்மன், சிமுகனின் பின் வந்தவனால் வீழ்த்தப்பட்டுள்ளான். பிரம்மாண்ட புராணத்தில், "நான்கு கண்வர்கள் இவ்வுலகை 45 ஆண்டுகள் ஆள்வர்; ''பின்பு'', ஆட்சி ''மீண்டும்'' ஆந்திரர் வசமாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறிப்பின் படி, கண்வர்கள் ஆட்சிக்கு வரும் முன்பே சாதவாகனர்கள் ஆட்சியிலிருந்துள்ளமையும், அவர்கள் கண்வர்களால் அடக்கப்பட்டமையும், பின்பு சாதவாகன மன்னனொருவனால் கண்வ ஆட்சி முறியடிக்கப் பட்டுள்ளமையும் உய்த்தறியலாம். A.S. அல்தேகர், K.P. சயசுவால், V.A. சிமித் மற்றும் ஏனைய சில அறிஞர்கள் இக்கொள்கையை ஆதரிக்கின்றனர்.<ref name="SC_19742" />
3,307

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3128643" இருந்து மீள்விக்கப்பட்டது