கோ. வில்வபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கோ. வில்வபதி''' (''Ko.Vilvapathi'') [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[கல்வியில் வழிகாட்டுதல்|கல்வியாளர்]], [[எழுத்தாளர்]], [[பதிப்பகம்|பதிப்பாளர்]] என்ற பன்முகங்கள் கொண்ட ஒரு தமிழறிஞராவார். [[இலக்கியம்]], [[இலக்கணம்]] கற்பிப்பதில் இவர் சிறந்து விளங்கினார். மூன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வகுப்புகள் வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களுக்கு கோனார் தமிழ் உரை என்ற வழிகாட்டு நூலை எழுதியவர் கோ. வில்வபதியேயாவார். நாடு தழுவிய அளவில் உயர்நிலைப் பள்ளி முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கு முன் மாதிரித் தமிழ்த் தேர்வுகளை நடத்திய சென்னை மாணவர் மன்றத்தின் தலைவராக வில்வபதி 19 ஆண்டுகள் உழைத்துள்ளார். மேலும், இவர் தலைமையில்தான் மாணவர் மன்றப் பொன் விழா, [[மயிலை சிவமுத்து]] சிலை திறப்பு விழா, கட்டடத் திறப்பு விழா போன்ற விழாக்கள் நடைபெற்றன.
 
[[திருமுருகாற்றுப்படை]], [[சிறுபாணாற்றுப்படை]], [[பெரும்பாணாற்றுப்படை]] ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கும் [[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தின்]] [[பால காண்டம்]], [[அயோத்தியா காண்டம்]]<ref>{{Cite web |url=https://books.dinamalar.com/books_main.asp?ty=1&apid=6622 |title=Tamil Devotional Books |website=books.dinamalar.com |access-date=2021-04-14 |Science Books |Literature Books |History Books}}</ref>ஆகிய பகுதிகளுக்கும் தெளிவுரை எழுதியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கோ._வில்வபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது