தமிழர் காலக்கணிப்பு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 220:
பண்டைய தமிழகத்தில் [[சூரியமானம்]], [[சந்திரமானம்]] எனும் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளன. [[சூரியமானம்]] என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். [[சந்திரமானம்]] சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.
 
=====சந்திரமாதம்சந்திரமானம்=====
ஒரு '''சந்திரமாதம்''' என்பது, [[சந்திரன்|சந்திரனானது]] [[பூமி|பூமியை]] ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். இவ்வாறு சுற்றி வரும் போது [[பூமி|பூமியிலிருந்து]] பார்ப்பவர்களுக்குச் சந்திரன் முற்றாகவே தெரியாத ஒரு நிலையான [[அமைவாதை|அமைவாதையிலிருந்து]] படிப்படியாக வளர்வது போல் தோற்றமளித்து முழு [[வட்டம்|வட்டமாகத்]] தெரியும் நிலையான [[பூரணை|பூரணைக்கு]] வரும். இந்த காலத்தின் பெயர், வளர்பிறை காலம் எனப்படும். பின்னர் அதன் உருவம் தேய்ந்து மீண்டும் முற்றும் தெரியாத நிலையான [[அமைவாதை|அமைவாதைக்கு]] வரும். இந்த காலத்தின் பெயர், தேய்பிறை காலம் எனப்படும். சந்திரன் பூமியை இவ்வாறு தொடர்ந்து சுற்றி வருவதனால் [[அமைவாதை|அமைவாதையும்]] [[பூரணை|பூரணையும்]] மாறி மாறி வருகின்றன. இரண்டு அடுத்தடுத்து வரும் அமைவாதைகளுக்கு இடைப்பட்ட காலமும், அவ்வாறான இரண்டு பூரணைகளுக்கு இடைப்பட்ட காலமும் சமனான அளவு கொண்டவை. இந்தக் கால அளவு(29.53059 நாட்கள்) 29 [[நாள்|நாட்கள்]] 31 [[நாழிகை|நாழிகைகள்]] 50 [[விநாடி|விநாடிகள்]] 8 [[தற்பரை|தற்பரைகள்]] ஆகும். சந்திரன் பூமியை 27.3 நாட்களிலேயே சுற்றி முடித்துவிடுகிறது. ஆனால், பூமி சூரியனை சுற்றி வருவதால், சந்திரமாதம் தொடங்கிய பொழுது சூரியன் இருந்த அதே நிலைக்கு சந்திரன் வர 2.23 நாட்கள் அதிகமாக எடுத்துக்கொள்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்_காலக்கணிப்பு_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது