உடலாழம் (மலையாளத் திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox film | name = உடலாழம் | image..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:35, 17 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்


உடலாழம் (Udalaazham) இது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளம் மற்றும் கேரளாவின் காட்டுப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் பேசும் மொழியான பனியா மொழி கலந்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இப்படத்தில் மணி, ரம்யா வல்சாலா, அனுமோள், இந்திரன் போன்றோர் நடித்துள்ளார்கள்.[1]

உடலாழம்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிபனியா மொழி, மலையாளம்

கதை

கேரளாவின் அடர்ந்த காட்டில் வாழும் குலிகன் என்ற பழங்குடி திருநங்கை தனது சிறுவயதில் மாத்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். ஒரு ஆணாக பிறந்து வளர்ந்த அவனுக்கு ஒரு பெண்ணுக்கான குணம் மனதளவில் உள்ளது. வேலைக்காக காட்டைவிட்டு வெளியில் வந்துபோகும்போதெல்லாம் காமுகர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறான். இதில் இரண்டு காதல் கதை விவகாரங்கள் அம்மக்களின் வாழ்க்கையையே அழிவிற்கு கொண்டு செல்கிறது. அவர்களை காட்டைவிட்டு வெளியேற்றத்துடிக்கும் சில கூட்டமும், வெளியில் இருக்கும் அவனைவேட்டையாட துடிக்கும் கூட்டமும் அவனை தொடர்ந்து துரத்துகிறது.

மேற்கோள்கள்

  1. "Body Deep / Udalaazham". IFFK.