'''சிவனொளிபாதம்''' அல்லது '''பாவா ஆதம் மலை''' (''Adam's Peak''; [[சிங்கள மொழி|சிங்களம்]] ''சிறிபாத'', [[அராபிய மொழி|அராபியம்]] ''Al-Rohun'') கடல் மட்டத்திலிருந்து 2,243 [[மீட்டர்]] (7,359 [[அடி]]) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]], [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாண]]ங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] காலடிச் சுவடாக [[பௌத்தம்|பௌத்தர்]]களால் கருதப்படுகிறது, [[இந்து சமயம்|இந்து சமய]] நம்பிக்கைகளின் படி இது [[சிவன்|சிவனின்]] காலடிச் சுவடாக கருதப்படுவதோடு [[இஸ்லாம்|இஸ்லாமியர்கள்]] இதை பாவா ஆதம் மலை - ஆதாம் [[ஆதாம்|ஆதாமின்]] காலடிச் சுவடாக கருதுகின்றனர்.