அமெரிக்க உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
 
வரிசை 26:
'''அமெரிக்க உள்நாட்டுப் போர்''' (''American Civil War'', 1861–1865) அல்லது '''மாநிலங்களுக்கு இடையேயான போர்''' என்பது [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும்]], தென் மாநிலங்களில், [[ஜெபர்சன் டேவிஸ்]] என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]]க்கும் இடையில் நடைபெற்ற ஒரு [[உள்நாட்டுப் போர்]] ஆகும்.<ref name="NYT JD Cap">{{cite web|url=http://www.nytimes.com/1865/05/10/news/important-proclamations-belligerent-rights-rebels-end-all-nations-warned-against.html|title=The Belligerent Rights of the Rebels at an End. All Nations Warned Against Harboring Their Privateers. If They Do Their Ships Will be Excluded from Our Ports. Restoration of Law in the State of Virginia. The Machinery of Government to be Put in Motion There. |work=The New York Times|agency=[[அசோசியேட்டட் பிரெசு]]|date=May 10, 1865|accessdate=December 23, 2013}}</ref>
 
== வரலாறு ==
ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் [[சுதந்திர மாநிலம் (ஐக்கிய அமெரிக்கா)|சுதந்திர மாநிலங்களையும்]], அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனினதும்]] அவர் சார்ந்திருந்த [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சி]]யினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் [[அடிமை முறை]] விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர்.<ref>[https://cwemancipation.wordpress.com/2011/04/17/slavery-and-secession-1860-census-statistics/ "Date of Secession Related to 1860 Black Population"], America's Civil War</ref>
 
== குடியரசுக் கட்சியின் வெற்றி ==
இந்த உடன்பாடு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்கா மேற்கு நோக்கி அப்போது வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் புதிய மாநிலங்கள் ஒவ்வொன்றாக அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிதாய் இணைந்த மாநிலங்களில் பண்ணை அடிமைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்குமிடையில் மறுபடியும் பிரச்சினைத் தோன்றியது. இந்த நிலையில்தான் அடிமைமுறையானது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்கிற கோட்பாட்டை வலியுறுத்தியவர் ஆப்ரஹாம் லிங்கன் ஆவார். 1860 இல் நிகழ்ந்த [[அமெரிக்கத் தலைவர்]] தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1861 இல் அமெரிக்கக் குடியரசின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. லிங்கன் தலைவரானால் தங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகுதியாகுமென்று ஏழு தென் மாநிலங்கள் அச்சப்பட்டன. அவை, லிங்கனை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. மேலும், அவை அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாகவும் தம்மை அறிவித்துக் கொண்டன. கூட்டமைப்பு (கான்ஃபெடரசி) என்ற பெயரில் நாடு ஒன்றை அத் தென் மாநிலங்கள் ஏற்படுத்திக் கொண்டன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்டது. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதாலும், ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதியதாலும், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் '''ராபர்ட் ஈ லீ''' ஆவார்.
 
== போரின் போக்குகள் ==
கிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி [[ராபர்ட் ஈ. லீ]] (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் [[கெட்டிஸ்பர்க் போர்|கெட்டிஸ்பர்க்]] என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. [[விக்ஸ்பர்க்]] கையும் (Vicksburg), [[ஹட்சன் துறை]]யையும் (Port Hudson) [[யுலிசீஸ் கிராண்ட்]] (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி ஆற்றின்]] முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது. 1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, [[வர்ஜீனியா]]வின் [[ரிச்மண்ட்]]டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி [[வில்லியம் ஷெர்மன்]] (William Sherman) [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வின் [[அட்லான்டா]]வைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற [[ஷெர்மனின் கடல் நோக்கிய படையெடுப்பு|கடல் நோக்கிய படையெடுப்பைத்]] தொடங்கினார். 1865 ஏப்ரலில் [[ஆப்பொமாட்டக்ஸ் மாளிகைப் போர்|ஆப்பொமாட்டக்ஸ் மாளிகை]]யில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.
 
== போரின் விளைவுகள் ==
[[பிரித்தானியா]], [[பிரான்ஸ்]] ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் [[போர்க்கப்பல்]]களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான [[ராபர்ட் ஈ. லீ]], [[ஜோசேப் ஜான்ஸ்டன்]] ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜார்ஜியா]]வில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர்.வரலாற்று ஜான் ஹட்லெஸ்டோன் என்பவரின் கூற்று படி இறந்தவர்களில் அனைத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆண்களில் பத்து சதவீதம் 20-45 வயதுடையவர்கள் என்றும் தெற்கு மாகாண வெள்ளையின ஆண்களில் 30 சதவீதம் 18-40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன. மேலும், அமெரிக்க உள்நாட்டு போரே முதல் தொழில்துறை சார்ந்த போர் ஆகும்.இப்போரின் போது தான் ரயில்பாதைகள், தந்தி,நீராவி படகுகள், மற்றும் பெருமளவிலான தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் கட்டுமிடங்கள், வங்கிகள், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி போன்ற பல தொழில்கள் விரிவு படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது.
 
வரிசை 137:
கூட்டமைப்பின் இறப்பு எண்ணிக்கைகளில் கருப்பினத் துருப்புக்கள் 10 சதவிகிதம் ஆவர். அவர்களில் 15 சதவிகிதம் நோயால் இறந்தனர் ஆனால் போரில் கொல்லப்பட்டவர்களில் 3 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே. ஆப்பிரிக்க அமெரிக்கர்களிடையே இழப்புகள் அதிகமாக இருந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து இறப்புக்களில் இருந்தும், இராணுவத்தில் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ 20 சதவீத ஆபிரிக்க அமெரிக்கர்கள் உள்நாட்டுப் போரின் போது தங்கள் உயிர்களை இழந்தனர்.<ref name=Aptheker>Herbert Aptheker, "Negro Casualties in the Civil War", ''The Journal of Negro History'', Vol. 32, No. 1. (January 1947).</ref>{{Rp|16}} குறிப்பிடத்தக்க வகையில், கருப்பின வீரர்களின் இறப்பு விகிதம் வெள்ளை வீரர்களைக் காட்டிலும் கணிசமாக உயர்ந்தது.
 
== அடிமை முறை ==
19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன.
[[Image:US Secession map 1865.svg|250px|thumb|left|<center>'''மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதி எல்லைகள், 1864–5.</center>'''
வரிசை 153:
{{legend|#E9B96E| கூட்டமைப்பினால் கோரப்பட்டுச் சில சமயங்களில் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகள்}}]]
 
== குறிப்புகள் ==
{{reflistReflist|30em|group=கு}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
 
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_உள்நாட்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது