ஐந்திணை ஐம்பது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 6:
 
==எடுத்துக்காட்டு==
 
பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும், பசுமையான நினைவுகளையும் விடுத்துக் [[காதலன்|காதலனுடன்]] வரண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் [[காதல்]] வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புக்கள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந் நூலில் வருகின்றது.
 
: ''சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்''
வரி 11 ⟶ 13:
: ''கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்''
: ''உள்ளம் படர்ந்த நெறி.''
 
ஆணும் பெண்ணுமான இரு [[மான்|மான்கள்]] (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் எனத், தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/ஐந்திணை_ஐம்பது" இலிருந்து மீள்விக்கப்பட்டது