திக்கல் வெளவால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Tickell's bat" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:26, 26 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

திக்கல் வெளவால் (Tickell's bat)(ஹெசுபெரோப்டென்சு திக்கெல்லி) என்பது வெசுபர் வகை வெளவால் இனமாகு. இது வங்களாதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.

விளக்கம்

இதனுடைய நீளம் தலை மற்றும் உடல் 7 cm (2.8 அங்) ஆகும். முன்கை 5 மற்றும் 6 cm (2.0 மற்றும் 2.4 அங்) நீளமுடையது.

ஆண் வெளவாலினைவிட பெண் வெளவால் பெரியவை. பொதுவாக இவற்றின் நிறம் சாம்பல் மஞ்சள் நிறத்திலிருந்து பிரகாசமான தங்கப் பழுப்பு வரை மாறுபடும். அடிப்பகுதியில் சாம்பல் நிறம் குறைவாகக் காணப்படும். மென்மையான உரோமங்கள் அடர்த்தியாகக் காணப்படும். கை, கால்களின் விரல்கள் இளஞ்சிவப்பு நிறமாகவும், அவற்றுக்கிடையேயான சவ்வு கருப்பு நிறமாகவும் இருக்கும். இடை-தொடை சவ்வு இளஞ்சிவப்பு நிறமானது. வெளிப்புற விளிம்பை நோக்கி கருப்பு நிறமாக மாறுகிறது. முகவாய் பரந்து மற்றும் வீங்கியிருக்கும். நகங்கள் கருப்பு நிரத்திலானது. இறக்கைகள் மிதமான பரப்பினை உடையன: 38 மற்றும் 41 cm (15 மற்றும் 16 அங்), மற்றும் 7 சென்டிமீட்டர்கள் (2.8 அங்குலங்கள்) அகலமானது. வாலின் நுனியில் சவ்வு இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்கல்_வெளவால்&oldid=3137904" இலிருந்து மீள்விக்கப்பட்டது