புதுவைக் கிருஷ்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
 
தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், 'புதுவைக் கிருஷ்ணா' என்னும் புனைப் பெயரில் கவிதைகள், சிறுகதைகள், நாவல், கட்டுரை எனப் பல படைப்புகளைப் படைத்து வருபவர். தமிழகத்தின் அன்னை எனப் போற்றப்படும் சென்னையில் கே.கே. நகரில் பிறந்து வளர்ந்தவர். சென்னை, கோடம்பாக்கம் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவர். தாத்தா கோவிந்தன் இராணுவப்பணியில் இருந்ததால் நாட்டுப்பற்றுடன் திகழ்ந்தார். மேனிலைக் கல்வி பயிலும் காலத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலரானார். சென்னை, கௌரிவாக்கத்திலுள்ள எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரியில் இளங்கலைப் படிப்பு பயிலும்பொழுது தேசிய மாணவர்ப்படையில் சேர்ந்து 'பி' சான்றிதழ் பெற்றார். பின்னர் முதுகலை மாநிலக்கல்லூரியிலும், இளமுனைவர் (எம்.ஃபில்) பட்டம் பச்சையப்பன் கல்லூரியிலும், முனைவர்ப்பட்டம் மாநிலக்கல்லூரியிலும் பெற்றார். மாநிலக்கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றிய சுப்பிரமணியக் கவிராயாரின் ஆய்வாளர்களில் ஒருவர் என்னும் பெருமை இவருக்குண்டு. கவிஞர் மு.மேத்தாவின் வரலாற்றுப் புதினங்களை ஆய்வு செய்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/புதுவைக்_கிருஷ்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது