முகமது எகியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''முகமது எகியா''' (''Mohamaed Ehiya'') எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

13:49, 14 மே 2021 இல் நிலவும் திருத்தம்

முகமது எகியா (Mohamaed Ehiya) என்பவர் ஒரு மலர் வர்த்தகர் ஆவார். இவர் ஆசிய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். உலகமெங்கும் சுமார் 4500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மலர்களை சாகுபடி செய்து வரும் இவர் 14 நாடுகளுக்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதியையும் செய்து வருகிறார்.

சுயசரிதை

இந்திய மாநிலமான தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறை அடுத்த நடுக்கடை என்ற சிறிய கிராமத்தில் முகமது கனி, அமீர் ஜான் தம்பதியினருக்கு மூன்று சகோதரர்களில் இரண்டாவதாகப் பிறந்தார். [1] தனது ஆரம்பக்கல்வியை நடுக்கடையில் முடித்த இவர், உயர்நிலைக் கலிவிக்காக திருவையாறு சென்று அங்கு ஆறாம் வகுப்பில் சேர்ந்தார். அங்கே தனது ஆசிரியரின் கோபத்தினால் இவரது கல்வி தடைபட்டது.

பின்னர், மலேசியாவில் வேலைபார்த்து வந்த இவரது தந்தைக்கு உதவியாக சிலகாலம் அவருடன் இருந்தார். பின்னர், துபாயில் வேலை பார்த்து வந்த தனது சகோதரனிடம் சென்றார். அவர் இவருக்கு துபாய் காவல் நிலையத்தில் ஒரு அலுவலக உதவியாளர் பணியினைப் பெற்றுத் தந்தார். விடுமுறை நாட்களில் தனது சகோதரனுக்கு உதவியாக அவர் பணி செய்து வந்த பூக்கடைக்குச் செல்லத் தொடங்கினார்.

புதிய வணிகம்

மலர் வியாபாரத்திற்கு உலகமெங்கும் வரவேற்பு இருந்ததை அறிந்த எகியா தனது சகோதரன் பசீர் அகமதுவுடன் சேர்ந்து துபாயில் "சன் புளோரா டிரேடிங்" என்ற சிறிய அளவில் வர்த்தகத்தை ஆரம்பித்தார். பின்னர், படிப்படியாக சார்ஜா, மலேசியா, கென்யா [2] , பெங்களூர், சிட்னி, புளோரிடா, கோலாலம்பூர், பேங்காக், மஸ்கட் கத்தார், எத்தியோப்பியா, சவூதி அரேபியா போன்ற இடங்களில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். இவரது நிறுவனம் தற்போது 6000 மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது. [3]

பிற வணிகங்கள்

எகியா, மலர் வர்த்தகம் தவிர வீட்டுமனை விற்பனை, சுற்றுலாப் போக்குவரத்து, பெட்ரோலியப் பொருட்கள் வர்த்தகம் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.

விவசாயம்

விவசாய ஈடுபாடு காரணமாக தஞ்சாவூர் அருகே 150 ஏக்கர் பரப்பளவில் மாதிரிப் பண்ணை அமைத்து அதில் கேரட், தக்காளி, இஞ்சி, பூண்டு போன்ற மாற்றுப் பயிர்களை பயிரிட்டு வருகிறார். மேலும், கொடைக்கானலில் 60 ஏக்கர் பரப்பளவில், கார்னேசன் மலர்களும், காரைக்காலில் 100 ஏக்கர் அளவில் ஆர்கிட் பூக்களும் சாகுபடி செய்து வருகிறார்.

அறக்காரியங்கள்

  • திருவையாரில் தான் படித்த பள்ளிக்கு மூன்று வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டிடம் கட்டி அதற்கு தனது தலைமையாசிரியர் டி.என் பட்டாபிஷேகத்தின் பெயரை வைத்துள்ளார்.
  • தஞ்சாவூரில் ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தை புதுப்பிக்கும் பணிக்கு நிதியுதவி செய்துள்ளார்.
  • தனது சொந்த ஊரான நடுக்கடையில் ஒரு இசுலாமியத் தொழுகைக் கூடம் கட்டித் தந்துள்ளார்.

குடும்பம்

இவருக்கு பசீர் அகமது, சாதிக் பாட்சா என்ற இரு சகோதரர்கள் இருக்கின்றனர். இவருக்கு மெஹ்ராஜ் பேகம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு சமீர் என்ற ஒரு மகனும், சமீரா என்ற ஒரு மகளும் (இரட்டைக் குழந்தைகள்) இருக்கின்றனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_எகியா&oldid=3147922" இலிருந்து மீள்விக்கப்பட்டது