புதுவைக் கிருஷ்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
No edit summary
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
{{wikify}}
{{unreferenced}}
 
தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், 'புதுவைக் கிருஷ்ணா' என்னும் புனைப் பெயரில் கவிதைகள், சிறுகதைகள், நாவல், கட்டுரை எனப் பல படைப்புகளைப் படைத்து வருபவர். தமிழகத்தின் அன்னை எனப் போற்றப்படும் சென்னையில் கே.கே. நகரில் பிறந்து வளர்ந்தவர். சென்னை, கோடம்பாக்கம் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவர். தாத்தா கோவிந்தன் இராணுவப்பணியில் இருந்ததால் நாட்டுப்பற்றுடன் திகழ்ந்தார். மேனிலைக் கல்வி பயிலும் காலத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலரானார். சென்னை, கௌரிவாக்கத்திலுள்ள எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரியில் இளங்கலைப் படிப்பு பயிலும்பொழுது தேசிய மாணவர்ப்படையில் சேர்ந்து 'பி' சான்றிதழ் பெற்றார். பின்னர் முதுகலை மாநிலக்கல்லூரியிலும், இளமுனைவர் (எம்.ஃபில்) பட்டம் பச்சையப்பன் கல்லூரியிலும், முனைவர்ப்பட்டம் மாநிலக்கல்லூரியிலும் பெற்றார். மாநிலக்கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றிய சுப்பிரமணியக் கவிராயாரின் ஆய்வாளர்களில் ஒருவர் என்னும் பெருமை இவருக்குண்டு. கவிஞர் மு.மேத்தாவின் வரலாற்றுப் புதினங்களை ஆய்வு செய்தவர்.
 
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரியில் படிக்கும்பொழுது பணிக்குச்சென்றார். காலையில் கல்லூரி மாலையில் ஓட்டல் என அவருடைய முதுகலைப்படிப்பு நிறைவுற்றது. சென்னை, தேனாம்பேட்டையிலிருந்த மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டம் (எம்.எட்.) பெற்றபிறகு பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் விரிவுரையாளருக்கான தேர்வில் (யுஜிசி, நெட்) இருமுறை தேர்ச்சி பெற்றார். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சென்னை அண்ணாநகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் மாலை நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். காலையில் சென்னை, கந்தக்கோட்ட முருகன் கோவிலின் முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைப்பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வியில் பயின்ற மாணாக்கர்களுக்கும் தமிழ் இலக்கியம் கற்பித்துள்ளார். பின்னர் சென்னை, பல்லாவரத்திலுள்ள வேலன் அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்பொழுது மத்திய பொதுப்பபணி தேர்வாணையாத்தால் (யு.பி.எஸ்.ஸி) தேர்வு செய்யப்பெற்று புதுச்சேரி, தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கு பணியாற்றும் காலத்தில் தேசிய மாணவர்ப்படை (என்.சி.சி.) விமானப்படைப் பிரிவில் பறக்கும் அதிகாரியாகப் (ஃப்ளையிங் ஆஃஸராக) பணியாற்றினார். பின்னர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தமிழ்த்துறைத்தலைவராகப் பணிமாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பின் புதுச்சேரி, காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பணிமாற்றம் செய்யப்பட்டு தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
 
       தமிழ் இலக்கியத்தில் மட்டுமின்றி மொழியியல், இதழியல், மொழிபெயர்ப்பியல், ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஐந்து எம்.ஏ. என நண்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். நாட்டுப்புறவியலிலும், சைவ சித்தாந்தத்திலும் பட்டயப் படிப்பு படித்தார். ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம்,ஃப்ரெஞ்சு எனப் பல மொழிகளைக் கற்றவர்.
 
சொற்பொழிவாற்றுவதிலும், மாணாக்கர்களை, இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலும் தணியாத விருப்பம் கொண்டவர். தமிழ் இலக்கியங்களை பல்வேறு ஊடகங்களில் பதிவு செய்து வருபவர். பதிமூன்று நூல்களும் எழுபத்தோரு ஆய்வுக்கட்டுரைகளும் எழுதி, தமிழ் இலக்கியப் படைப்புலகில் தம்மை இணைத்துக்கொண்டவர்.
 
==நூல்கள்:==
 
1. தமிழ் மங்கை (சிறுகதைத் தொகுப்பு)          – நவம்பர் 2008
 
·2. தூய்மை (அனைவர்க்கும் சுற்றுச்சூழல் கல்வி) - நவம்பர் 2008
 
3. தமிழ் முரசம் (இலக்கியக் கட்டுரைகள்)      – திசம்பர் 2008
வரி 38 ⟶ 40:
13. 'அன்பின் உரு- அருளின் தரு வள்ளலார்' - திசம்பர் 2020
 
==விருதுகள்:==
 
* கலை வளர் செம்மல் விருது
·        ‘கலை வளர் செம்மல் விருது’, ‘மரபுப் பாவலர்’ பட்டம் , ‘தமிழ்த் தோன்றல்’ விருது, ‘பாவேந்தர் விருது’, ‘கவியரசர் கண்ணதாசன் விருது’,‘ஆசிரியர் செம்மல் விருது , ‘பாரதி பணிச் செல்வர் விருது’ ’டாக்டர் அம்பேத்கர் கூட்டுறவு தேசிய விருது’
* மரபுப் பாவலர் பட்டம்
* தமிழ்த் தோன்றல் விருது
* பாவேந்தர் விருது
* கவியரசர் கண்ணதாசன் விருது
* ஆசிரியர் செம்மல் விருது
* பாரதி பணிச் செல்வர் விருது
* டாக்டர் அம்பேத்கர் கூட்டுறவு தேசிய விருது
 
·   ==இலக்கியப் பணியும் சமூகப் பணியும்==
  அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், புதுச்சேரி படைப்பாளர் இயக்கம், புதுச்சேரி இலக்கியச் சோலை ,   புதுவைத் தமிழ்ச்சங்கம்,  பாவலர் பயிற்சிப் பட்டறை ,   சிவசு அறக்கட்டளை மற்றும் பெண்கள் செயற்பாட்டுக் குழு , புதுச்சேரி 'குறளிசைக்கூடு' , காரைக்கால் 'நேரு யுவ கேந்திரா' 'புதுச்சேரி திருக்குறள் மன்றம்' எனப் பல்வேறு இலக்கிய, சமூக மன்றங்களில் பொறுப்பாளராகவும், உறுப்பினராகவும் நின்று தமிழ் இலக்கியப்பணிகளையும் சமூகப்பணிகளையும் ஆற்றிவருபவர்.
 
  அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், புதுச்சேரி படைப்பாளர் இயக்கம், புதுச்சேரி இலக்கியச் சோலை ,   புதுவைத் தமிழ்ச்சங்கம்,  பாவலர் பயிற்சிப் பட்டறை ,   சிவசு அறக்கட்டளை மற்றும் பெண்கள் செயற்பாட்டுக் குழு , புதுச்சேரி 'குறளிசைக்கூடு' , காரைக்கால் 'நேரு யுவ கேந்திரா' 'புதுச்சேரி திருக்குறள் மன்றம்' எனப் பல்வேறு இலக்கிய, சமூக மன்றங்களில் பொறுப்பாளராகவும், உறுப்பினராகவும் நின்று தமிழ் இலக்கியப்பணிகளையும் சமூகப்பணிகளையும் ஆற்றிவருபவர்.
"https://ta.wikipedia.org/wiki/புதுவைக்_கிருஷ்ணா" இலிருந்து மீள்விக்கப்பட்டது