சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள்கள்: வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 44:
எண்பதுகளின் பிற்பகுதியில் சந்திரபோசின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய இசையமைப்பில் சித்ராவிற்கு 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
 
மேலும் வி.குமாரின் இசையமைப்பில் எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம் ' பாடிய சித்ரா அவர்கள் [[குன்னக்குடி வைத்யநாதனின்]] 'உலா வந்த நிலா' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், [[டி. ராஜேந்தர்|டி.ராஜேந்திரனின்]] இசையில் சில பாடல்களையும் பாடினார்.
 
சில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். ஆர்.டி.பர்மன் (நதியே நதியே நைல் நதியே), லட்சுமிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில்), பப்பி லஹரி (தக்கதிமிதானா), வி.எஸ். நரசிம்மன் (விழிகளில் கோடி அபிநயம்), எல்.வைத்யநாதன் (என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா), தேவேந்திரன் (கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம்புது ஓலை வரும்), ஹம்சலேகா (ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம், சேலை கட்டும் பெண்ணுக்கொரு), எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில்), மனோஜ் - க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே) , [[பாக்கியராஜ்]] (அம்மாடி இது தான் காதலா), எஸ்.பி.பி (உன்னைக் கண்ட பின்பு தான், இதோ என் பல்லவி), [[எஸ். ஏ. ராஜ்குமார்]] (ஆயிரம் திருநாள்) , [[தேவா]] (சந்திரலேகா, வேண்டும் வேண்டும்), போன்றவர்களின் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு கட்டியம் கூறும் முகமாக அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது