சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
[[File:K s chithra.jpg|250px|frameless|left]]
ஒரு முறை இயக்குனர் [[பாசில்]] தம்முடைய நோக்காத தூரத்து கண்ணும் நட்டு என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த [[இளையராஜா]] சித்ராவிற்கு அழைப்பு விடுத்தார். இளையராஜாவின் இசையமைப்பில் '''நீ தானா அந்தக் குயில்'''என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது', 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன.
1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ('[[கீதாஞ்சலி (1985 திரைப்படம்)|கீதாஞ்சலி]] ' திரைப்படத்தில் 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயிலிசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது ' ஆகிய பாடல்கள் சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட '[[சின்னக்குயில்]] சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து', 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை [[சிந்து பைரவி (திரைப்படம்)|சிந்து பைரவி]]யில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். சித்ராவின் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் இளையராஜாவின் பங்கும் அடங்கியிருக்கிறது.
 
அடுத்து 1985-1986ஆம் ஆண்டில், இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் வெற்றியடைந்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன்படுத்தினர். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய [[கங்கை அமரன்]], மெல்லிசை மன்னர் [[விஸ்வநாதன்]], சங்கர் - கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா
"https://ta.wikipedia.org/wiki/சித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது