"கிருஷ்ணதேவராயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

91 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
சி (→‎top)
 
==படையெடுப்புக்களும், வெளிநாட்டுத் தொடர்புகளும்==
விஜயநகரப் படைகள் சென்ற இடமெல்லாம் வெற்றியைக் குவித்த, கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலம், அப் பேரரசின் வரலாற்றில் பெருமைக்குரிய பகுதியாகும். சமயங்களில், இப் பேரரசர், போர்த் திட்டங்களைச் சடுதியாக மாற்றியமைப்பதன் மூலம், தோல்விகளை வெற்றிகளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இவரது ஆட்சிக்காலத்தின் முதற் பத்தாண்டுகள் நீண்ட முற்றுகைகளும், இரத்தம் சிந்திய படை நடவடிக்கைகளும், வெற்றிகளும் கொண்டதாக இருந்தது. இவரின் முக்கிய பகைவர்களாக, சாளுவ நரசிம்ம தேவ ராயன் காலத்திலிருந்தே தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டிருந்த [[ஒரிசா]]வின் [[கஜபதி பேரரசு|கஜபதி]]கள், ஐந்து துண்டாகப் பிரிந்து விட்டாலும் தொடர்ந்தும் பேரரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்த பஹமானி[[பாமினி சுல்தானகம்|பாமினி சுல்தான்கள்]], வளர்ந்துவரும் கடல் வல்லரசாக இருந்துகொண்டு, கடல் வணிகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போத்துக்கீசியர்[[போத்துக்கீசர்]] ஆகியோர் இருந்தனர். உம்மாத்தூர்த் தலைவர்கள், கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள்[[வெலமா]]க்கள் என்போரும் இடையிடையே பேரரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
 
==தக்காணத்து வெற்றிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3150747" இருந்து மீள்விக்கப்பட்டது