நா. காமராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்று இணைப்பு
சிNo edit summary
வரிசை 35:
1942 ஆம் ஆண்டு [[தேனி மாவட்டம்|தேனி மாவட்டத்தில்]] [[போ. மீனாட்சிபுரம்|போ. மீனாட்சிபுரத்தில்]] நாச்சிமுத்து, இலட்சுமி அம்பாள் தம்பதியினருக்கு பிறந்தார். இவர் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை வாழ்க்கை துணைவியாக ஏற்றுக்கொண்டவர், இவருக்கு தைப்பாவை என்ற மகளும், தீலீபன் என்ற மகனும் உள்ளனர்.
 
இவர் விளையும் பயிர் முலையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப பள்ளி பருவத்திலே பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்று போடிநாயக்கனூர் ஊர் மக்களால் யானை மீது இவரை அமரவைத்து ஊரைச் சுற்றி வந்து பெருமைபடுத்தியது இவரது கவிதை எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது,1964ஆம் ஆண்டில் மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் மாணவராக இருந்த பொழுது நடைபெற்ற [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்]] கலந்துக்கொண்டு போலிசாரால் கைது செய்யப்பட்டு காலில் விலங்கு பூட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். முதுகலைப் பட்டம் பெற்ற இவர் [[உத்தமபாளையம்]] [[ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில்ஹவுதியா கல்லூரி]]யில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.
 
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் திரைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கதர் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் அ.தி.மு.க வில் பல்வேறு பதவியில் இருந்துள்ளார். 1990 இல் மாநில மாணவர் அணி மற்றும் மாநில இலக்கிய அணி செயலாளர் பதவியில் இருந்துள்ளார், கலைஞர் மு.கருணாநிதி கையில் பல விருதுகள் பெற்றுள்ளார், 1991 ல் தமிழ் நாட்டு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினராக செல்வி ஜெ.ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.
"https://ta.wikipedia.org/wiki/நா._காமராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது