இண்டர்நெட் எக்சுபுளோரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
===4ஆவது பதிப்பு===
இண்டநெட் எக்ஸ்புளோளர் இன் 4ஆவது பதிப்பானது செப்டம்பர் 1997 இல் வெளிவந்தது. இது இயங்குதளத்திற்கும் உலாவியிற்குமான இடைவெளியை உறவை ஆழமாக்கும் வண்ணம் வெளிவந்தது. இந்தப் பதிப்பை விண்டோஸ் 95 அல்லது விண்டோஸ் எண்டி இயங்குதளத்தில் நிறுவும் பொழுது [[விண்டோஸ் டெக்ஸ்டாப் அப்டேட்]] என்பதைத் தேர்வுசெய்தால் பாரம்பரிய விண்டோஸ் எக்ஸ்புளோளர் ஆனது இணைய உலாவி போன்றே தோற்றமளிக்கும் ஓர் இடைமுகத்தை வழங்கியது அத்துடன் விண்டோஸ் டெக்ஸ்டாப்புடன் இணைய இடைமுகத்துடன் ஆக்டிவ் டெக்ஸ்டாப் ஆக மாறியது. விண்டோஸ் இயங்குதளத்துடன் ஒருங்கிணைத்தமையானது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இண்டநெட் எக்ஸ்புளோளர் இன் 4ஆவது பதிப்பானது குழுக்கொள்கைகள் எனப்பொருள்படும் [[குறூப் பாலிசி|குறூப் பாலிசிகளுக்கு]] ஆதரவினை வழங்கியது. இதன் மூலம் உலாவியின் பல்வேறு தேர்வுகளை விருப்படி அமைக்கவும் சில தேர்வுகளை கட்டுப்படுத்தவும் உதவியது. [[மைக்ரோசாப்ட் சாட்]] என்கின்ற அரட்டை மென்பொருளுடன் மேம்படுத்தப்பட்ட நெட்மீட்டிங் மென்பொருளும் இணைக்கப்பட்டிருந்தது. இது [[விண்டோஸ் 98]] பதிப்புடன் உள்ளடக்கப்பட்டிருந்தது.
 
இதன் 4.5 ஆவது பதிப்பானது ஆப்பிள் 68k கணினிகளின் ஆதரவை விலக்கினாலும் இலகுவான 128 பிட் என்கிறிப்ஷன் (Encryption) வசதிகளை வழங்கியது. இது முன்னைய பதிப்புக்களை விடத் உறுதியானதாக வெளிவந்தது.
 
===5ஆவது பதிப்பு===
இண்டநெட் எக்ஸ்புளோளரின் 5ஆவது பதிப்பானது [[18 மார்ச்]] [[1999]] இல் வெளிவந்தது. இந்தப் பதிப்பானது விண்டோஸ் 98 இன் இரண்டாவது பதிப்பு மற்றும் ஆபிஸ் 2000 பதிப்புக்களுடன் உள்ளிணைக்கப்பட்டிருந்தது. இது இருவழிச் சொற்கள், [[எக்ஸ் எம் எல்]], [[எக்ஸ் எஸ் எல் டி]] மற்றும் இணையப்பக்கங்களை ஒருங்கிணைந்த இணையப்பக்கங்களாகச் சேமிக்கும் (MHTML) வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தியது. இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இன் 5ஆவது பதிப்பையும் உள்ளடக்கியிருந்தது. இதுவே முதன்முதலாக XMLHttpRequest ஐ அறிமுகம் செய்து [[ஏஜாக்ஸ்]] இடைமுகத்தை பிறப்பித்தது. 16பிட் பதிப்புக்களில் இதுவே கடைசிப் பதிப்பும் ஆகும். பிழைதிருத்தப்பட்ட பதிப்பான இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.01 டிசம்பர் 1999 இல் வெளிவந்தது. [[விண்டோஸ் 2000]] இந்தப் பதிப்பையே உள்ளடக்கியிருந்தது. ஜூலை 2000 இல் வெளிவந்த பதிப்பானது மேம்படுத்தப்பட்ட அச்சு மேலோட்ட வசதிகளுடன் CSS, [[எச்டிஎம்எல்]] நியமங்களை ஆதரித்தது.
 
பொதுவாக இண்டநெட் எக்ஸ்புளோரர் ஆரம்பிக்கும் பொழுது வீட்டுப் பக்கத்தை (home page) காட்டும் இதைத் தவிர்க்க கட்டளை ஊடாக start -> Run -> iexplore -home என்றவாறு ஆரம்பிக்கலாம்.
"https://ta.wikipedia.org/wiki/இண்டர்நெட்_எக்சுபுளோரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது