கனகலதா கிருஷ்ணசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "பெண் தமிழ் எழுத்தாளர்கள்"; Quick-adding category "தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''லதா''' எனப்படும் '''கனகலதா கிருஷ்ணசாமி ஐயர்''' [[சிங்கப்பூர்|சிங்கப்பூரைச்]] சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் [[இலங்கை]]யில் பிறந்து, சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறியவர். சிங்கப்பூர் தேசிய நாளிதழான [[தமிழ் முரசு|தமிழ் முரசில்]] நீண்ட காலம் துணையாசிரியராகப் பணியாற்றுபவர். இவர் எழுதிய ''நான் கொலை செய்த பெண்கள்'' என்ற புத்தகத்திற்கு [[2008]] ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது (தமிழ்) வழங்கப்பட்டது<ref>[http://tamilmurasu.tamil.sg/node/2096 முரசு செய்தி ஆசிரியர் கனகலதாவுக்குச் சிங்கப்பூர் இலக்கிய விருது]</ref>.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[இலங்கை]]யில் [[நீர்கொழும்பு|நீர்கொழும்பில்]] பிறந்த கனகலதா [[நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம்|நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தில்]] கல்வி கற்றார். [[1983]] ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற [[கறுப்பு ஜூலை|இனக்கலவரத்தை]] அடுத்து குடும்பத்துடன் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்திற்கு]] இடம்பெயர்ந்து [[யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி]]யில் தனது கல்வியைத் தொடர்ந்தார். அதன் பின்னர் சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தார். 20 ஆண்டுகளாக [[தமிழ் முரசு]] பத்திரிகையில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
 
==எழுத்துப் பணி==
 
[[சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்|சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகக்]] கலைகள் மன்றம் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுதியிலும் (1995), தேசியக் கலைகள் மன்றம் தொகுத்த நூற்றாண்டுக்கால சிங்கப்பூர்க் கவிதைகள் பன்மொழித் தொகுப்பிலும் (2000), 'கனவும் விடிவும்' என்ற இந்திய [[இந்திய சாகித்ய அகாதமி|சாகித்திய அகாதமி]] வெளியிட்ட தற்காலத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவர் சிறுகதைகளும் எழுதி வருகிறார்.
 
கனகலதாவின் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் [[கணையாழி (இதழ்)|கணையாழி]], [[காலச்சுவடு]], [[உயிர்நிழல்]], மற்றும் [[சரிநிகர்]] போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது தீவெளி நூல் [[தமிழ்நாடு]] [[பெரியார் பல்கலைக்கழகம்|பெரியார் பல்கலைக்கழகத்தின்]] இலக்கியப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
==சிங்கப்பூர் இலக்கிய விருது==
{{main|சிங்கப்பூர் இலக்கிய விருது}}
[[2008]] ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான சிங்கப்பூர் இலக்கிய விருது கனகலதாவுக்கு ''நான் கொலை செய்த பெண்கள்'' என்ற நூலுக்காக வழங்கப்பட்டது. இவ்விருதோடு $10,000 வரை ரொக்கமும் இவருக்குக் கிடைத்தது. சிங்கப்பூரின் சமூக வளர்ச்சி, இளையர் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் 2008 [[டிசம்பர் 3]] ஆம் நாள் நடந்த விழாவில் விருதை வழங்கினார்.
 
==இவரது நூல்கள்==
* ''தீவெளி'' (கவிதைகள், 2003)
* ''பாம்புக் காட்டில் ஒரு தாழை'' (கவிதைகள், 2004)
* ''நான் கொலை செய்த பெண்கள்'' (சிறுகதைத் தொகுப்பு)
[[பகுப்பு:சிங்கப்பூர் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
{{writer-stub}}
* [http://www.tamilsydney.com/content/view/1612/37/ Eezham Tamil writer, K. Kanakalatha wins national award of Singapore]
 
[[பகுப்பு:சிங்கப்பூர் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனகலதா_கிருஷ்ணசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது