"குமரிக்கண்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

248 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
Almighty34 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3101594 இல்லாது செய்யப்பட்டது
சி (Rasnaboyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(Almighty34 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3101594 இல்லாது செய்யப்பட்டது)
 
சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்கியமான '''கி ரி அ கி பட் டு ரி யா''' என்ற வாக்கியமே குமரிக்கண்டம் ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு '''க ரி ய ர வ ன ட''' ஆகும். இதன்படி [[சுமேரிய நாகரிகம்|சுமேரிய நாகரிகத்தில்]] 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம்.<ref>http://www.urbandictionary.com/define.php?term=Tamil&defid=1700246
</ref> உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தினின்று சென்ற ஒரு கூட்டத்தாரே சுமேரியரின் முன்னோர் என்ற கருத்தும்<ref>தமிழரின் தோற்றமும் பரவலும் பேரா. இராமச்சந்திர தீட்சிதர்</ref> அச்சுமேரியர் குமரியை பெயர் வைத்து அழைத்ததும் வியப்பில்லை.
 
கடைச்சங்கத்தில்<!--சடை என்பது தலை அல்லது முதல் சங்கத்தை குறிக்கும்--> குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன.<ref>.http://books.google.co.in/books?id=w4VnAAAAMAAJ&q=pon+thondi+erumbukal&dq=pon+thondi+erumbukal&hl=en&ei=WF6hTqadOInUrQest7iDAw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CDUQ6AEwAA</ref> பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை ''[[பொன்]] தோண்டி எறும்புகள்'' என இலக்கியம் கூறுகிறது.<ref>http://books.google.co.in/books?id=kfS1AAAAIAAJ&q=pon+thondi+erumbukal&dq=pon+thondi+erumbukal&hl=en&ei=WF6hTqadOInUrQest7iDAw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDkQ6AEwAQ</ref> ''மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம்'' என்ற பழமொழியுமுண்டு.
முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றதென பண்டைய நூற்தகவல்கள் குறிக்கின்றன. குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் [[பாண்டியர்]]களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. இவ்விலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்கள் சிலவற்றையும் மூழ்கிய நகரங்கள் பற்றிய குறிப்பையும் கீழே காணலாம்.
 
[[தேவநேயப் பாவாணர்]] முதலானோர் இந்தக் குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினரென எழுதியுள்ளனர் <ref>ஞா. தேவநேயப்பாவாணர், தமிழ்வரலாறு (முதல் தொகுதி), தமிழ்மண் பதிப்பகம், 1967 (மறுபதிப்பு 2000), பக். 2-10 [http://www.tamilvu.org/library/lA46G/html/lA46G.htm]</ref> [[ஆதி மனிதன்]] தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் [[கடற்கோள்|கடல்கோளால்]] ([[சுனாமி]] போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து ஆகும்.
 
பண்டைய மற்றும் இடைக்கால தமிழ் மற்றும் சமசுகிருத படைப்புகள் பலவற்றில் இருந்த தென்னிந்தியாவின் நிலப்பகுதி பற்றிய புராண ஆவணங்கள் கடலில் மூழ்கி மறைந்தன. பாண்டிய பேரரசு கடல்கோளால் அழிந்தது பற்றிய விளக்கமான குறிப்புகளை சமகால இலக்கியமான இறையனார் அகப்பொருளில் காணமுடிகிறது. [[இறையனார் அகப்பொருள்]] உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இதுபோலச் செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை. நக்கீரரால் கூறப்பட்டிருந்த இந்தக் கருத்து முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. ஆரம்பகால தமிழ் வம்சத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் தமிழ்ச்சங்கம் தென் மதுரையில் 4400 ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்தது என்றும் அகத்தியர் உள்ளிட்ட 549 புலவர்கள் அச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் ஆய்ந்தனர் என்றும் கடவுளர்களான சிவன், முருகன் குபேரன் ஆகியோர் தலைமையில் அச்சங்கம் செயல்பட்டது என்றும் அதில் குறிப்புகள் காணப்படுகின்றன.
93

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3161537" இருந்து மீள்விக்கப்பட்டது