"எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
மாணிக்கவேலு உட்பட 6 காமன்வீல் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றனர். ஆரம்பத்தில் [[த. பிரகாசம்]] தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு [[சி. ராஜகோபாலாச்சாரி]] (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று காமன்வீல் கட்சி. அரசுக்கு மாணிக்கவேலு அளித்த ஆதரவுக்கு பிரதிபலனாக அவருக்கு ராஜாஜியின் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. 1954ல் [[காமராஜர்]] முதல்வரான பின்னர் மாணிக்கவேலுவுக்கு விற்பனை வரித்துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டது. 1954ல் அவர் காமன்வீல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 1962 வரை அமைச்சராகப் பணியாற்றினார். 1962-64ல் இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1964-70 காலகட்டத்தில் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை]]த் தலைவராகப் பணியாற்றினார். 1996ம் ஆண்டு மரணமடைந்தார்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3164337" இருந்து மீள்விக்கப்பட்டது