குன்றக்குடி அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 15:
[[1949]] ஆம் ஆண்டு [[செப்டம்பர் 5]] இல் ஆதீன இளவரசராகிய அவர், [[1952]] [[ஜூன் 16]] ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, '''குன்றக்குடி அடிகளார்''' என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், [[இந்து]] மதத்திற்கு மிகவும் சோதனையான காலம். [[இறைமறுப்பு]]ப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு [[1952]] [[ஆகஸ்ட் 11]] ஆம் நாள் சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே "அருள்நெறித் திருக்கூட்டம்".
 
[[1954]] [[ஜூலை 10]] ஆம் நாள் இதன் முதல் மாநாடு [[தேவகோட்டை]]யில் மூதறிஞர் [[இராஜாஜி]] தலைமையில் நடைபெற்றது. பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது, [[இலங்கை]]யிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப்பிரிவாக "அருள்நெறித் திருப்பணி மன்றம்" எனும் அமைப்பும் [[1955]] [[ஜூன் 10]] ஆம் நாள் கிளைத்தது. அப்போதைய தமிழக அரசின் துணையோடு தமிழ்நாடு "தெய்வீகப் பேரவை" எனும் அமைப்பு, [[1966]] இல் ஆரம்பிக்கப்பட்டது. தருமை ஆதீனஆதீனக் குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், [[1969]] முதல் [[1976]] வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார்.
 
==வெளிநாடுகள் பயணம்==
வரிசை 40:
* ''திருவருட்சிந்தனை''
* ''தினசரி தியான நூல்''
* ''குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16 தொகுதிகள்
 
===இலக்கியங்கள்===
வரி 57 ⟶ 58:
 
அடிகளார் எழுதிய சிறுகதைகள், அறிவொளி இயக்கத்தின் மூலமாக மக்களைச் சென்றெய்தியது. சில நாடகங்களும் அடிகளாரால் எழுதப்பெற்று அரங்கேறியுள்ளன. அவரது இறுதிக்காலத்தில் [[தினமணி]]யில் ''எங்கே போகிறோம்?'' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தார்.
 
== அடிகளாரைக் குறித்துச் சான்றோர்கள் ==
 
* இருபதாம் நூற்றாண்டின் சமய - சமுதாய ஞானியாகப் பாராட்டப் பெறுகிற தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் எதைச் சொன்னாலும் தெளிந்து சொல்வார் - தெளிவாகவும் சொல்வார். எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே' என்பதுபோல், தவத்திரு அடிகளார் அவர்களின் எழுத்தும் சொல்லும், சிந்தனையும் செயலும் மக்கள் சமுதாயத்தின் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்டே அமையும்.  "நாம் காணும் சமய நெறி, சமுதாயத் தொடர்புடைய நெறி, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக - சமுதாயத்தின் நல் வாழ்வுக்காக வேண்டுவன செய்யக் கடமைப்பட்டிருக்கிறது. அது; மனித சமுதாயத்தின் சிக்கல்கள் தொல்லைகள் அனைத்தையும் மாற்றியமைக்கின்ற பொறுப்பும் கடமையும் சமய நெறிக்கு இருக்கிறது" என்று கூறிச் சமயத்திற்கும் சமுதாயத்திற்கும் ஒரு பெரும் இணைப்புப் பாலத்தை உருவாக்கும் பணியை அவர் இயன்ற வகையெல்லாம் செய்து வருகின்றார். சமயவாதிகளிடையேயும் சமுதாயவாதிகளிடையேயும் அவர் ஒரு புரட்சிச் சின்னமாகவே திகழ்கின்றார். அவர், சைவநெறி பரப்பும் திருமடத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தாலும் அவரிடத்துச் சமய வெறியையோ, பிறசமயக் காழ்ப்பினையோ காண இயலாது. '''- டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குன்றக்குடி_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது