குன்றக்குடி அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 64:
சமய உலகில் இருந்து கொண்டு சமுதாய நோக்கு நோக்குவதில் அடிகளார் தனித்திறம் வாய்ந்தவர். தந்தை பெரியார் அவர்களுடன் தனிப்பெரும் நட்புப் பூண்டு இவர் இருந்த நிலையே இதற்கு நல்ல விளக்கம் தரும். மாடதிபதியாக இருந்தாலும், மகேசுவரனைப் பற்றி எண்ணினாலும் இவருடைய சிந்தனைகள் மக்கட் சமுதாயத்தைச் சுற்றியே சுழல்வதனைக் காணலாம். இம்முறையில் இவர் ஒரு புதுமைத் துறவியாகப் - புரட்சித் துறவியாகக் காட்சியளிக்கின்றார். மனிதன் விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதத் தன்மையைப் பெற்று இறைநிலையை எய்தவும், இயல்பாய் குறையினின்று நீங்கி, நிறை நலம் பெறச் சமயம் துணை செய்கிறது என்றும், பல்வேறு சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறியே மனித உலகத்தை ஈடேற்றுவதற்குத் தகுந்த நெறி, அந்நெறியே தமிழர் சமய நெறி என்றும் கடவுள் தன்மையெனப் பாராட்டப் பெறும் அன்பு, அருள், ஒப்புரவுக் கொள்கை நாட்டில் தழைக்கும்படி கடவுள் நம்பிக்கை உடையோர் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் சின்னங் களும், சடங்குகளும் மட்டுமே கடவுள் நெறிகள் ஆகா என்றும், மழை பொழிந்ததின் விளைவை மண் காட்டுவதைப் போல், சமயநெறி நின்று வாழ்வோரின் இயல்பினை வையகம் காட்ட வேண்டும் என்றும், விளைவுகள் காட்ட வேண்டும் என்றும், தமிழ்ச் சமயத்தில் தீண்டாமை இல்லையென்றும் "ஒன்றே குலம்" என்றும் திருமூலர் ஆணையின்படி ஒரு குலம் அமைக்க வேண்டுமென்றும், மனித உள்ளங்கள் அருள் நெறிவழி இணைக்கப் பெறும் பொழுது மண்ணகம் விண்ணகம் ஆகும் என்றும், தவத்திரு அடிகளார் அவர்கள் எடுத்துக் காட்டியிருப்பது உணர்ந்து போற்றத்தக்கதாகும். - '''நெ.து. சுந்தரவடிவேலு, சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்.'''<ref>{{cite book |last1=தவத்திரு பொன்னம்பல அடிகளார் (ப.ஆ) |title=குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை, தொகுதி – 16, |publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை. |pages=469-470 |ref=5}}</ref>
* ‘என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற குறிக் கோளை உள்ளத்தே கொண்டு துறவிக் கோலம் பூண்டு, தமிழ்த் தொண்டு ஆற்றிய சீரியோர் சிற்சிலர், பழங்காலந் தொட்டு செந்தமிழ் நாட்டில் இருந்து வந்திருக்கின்றனர். இந்தக் காலத்தில், அத்தகைய தலைமுறையைச் சார்ந்தவர் என்று மதிப்பிடத்தக்க முறையில், அருந்தமிழ்த் தொண்டு ஆற்றி வருபவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார்கள். எதிலும் தமிழ் எங்கும் தமிழ்' என்ற கொள்கையில் உறுதி பூண்டு, தமிழ் எல்லா வகையிலும் மேம்பாடு எய்தவும், தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் சிறப்பு அடையவும், தமிழ் நாடு எல்லா றிமுறைகளிலும் முன்னோடியாக விளங்கவும் வேண்டும் என்பதற்காக, அடிகளார் அவர்கள், தமது நேரம், நினைப்பு , உழைப்பு, ஊக்கம், அறிவு, ஆற்றல், முனைப்பு, முயற்சி ஆகிய எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சிறந்த சிந்தனையாளர்; நல்ல தமிழ்ச் சொற்பொழிவாளர் அழகு தமிழ் எழுத்தாளர்; பொதுத் தொண்டு புரியும் பெற்றியாளர்; பழகுவதற்கேற்ற பண்பாளர். '''- இரா. நெடுஞ்செழியன் மேனாள் கல்வி, சுற்றுலா அமைச்சர்.''' <ref>{{cite book |last1=தவத்திரு பொன்னம்பல அடிகளார் (ப.ஆ) |title=குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை, தொகுதி – 16, |publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை. |pages=473 |ref=6}}</ref>
* தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆழ்ந்த சிந்தனை யாளர். அடிகளார் சமயத் துறையின் தலைமை மாளிகை களில் புதிய சாளரங்களைத் திறந்தவர். வெயிலும், ஒளியும், புயலும், காற்றும் சமுதாயச் சூழலில் மட்டுமன்று; சமயச் சூழலிலும் இயல்பானவையே; ஏற்கத் தக்கவையே என்ற மனம் கொண்டவர். அறிவுலகத்தின் ஆய்விற்கும், வளரும் சமுதாயத்தின் மாற்றங்கட்கும், சமயங்கள் புறம்பானவையல்ல. இவற்றின் தாக்கங்கட்கு ஈடு கொடுத்து, சமய மரபுகள் நிற்க வேண்டுமே யன்றி, இவற்றினின்றும் பாதுகாக்கப்பட வேண்டுவன அல்ல எனும் துணிந்த உள்ளத்தினர். எனவே பகுத்தறிவு மேடையோ பொது உடமை வாதமோ, அவர் புறக்கணிக்கும் ஒன்றாக இருந்ததில்லை. புதிய விஞ்ஞான உலகிலும், புதிய அரசியல் கோட் பாட்டுச் சூழலிலும் புரட்சிகரமான சமுதாயத் தத்துவங் களிடையேயும், நம்பிக்கையோடும் நட்போடும், அடிப்படைச் சமய நடைமுறைகட்கு ஞாயம் கற்பித்து, உயர்ந்து நிற்பவர். புரட்சிகரமான கருத்துக்கள் தமிழர்தம் சமய உலகிற்குப் புறம்பானவையல்ல ; அனைத்து அதிகாரமும் அரசன் கையில் இருந்த காலத்தில் "நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடிய அப்பரும், மண்ணிற் பிறப்பதே பாவங்களின் விளைவு என்ற மனப்பான்மை பரவி நின்ற சூழலில் 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த வையகத்தே'' என்று பாடிய திருநாவுக்கரசரும், "கண்மூடிப் பழக்கமெலாம் மண் மூடிப் போக" என்று குரலெழுப்பிய இராமலிங்கரும் புரட்சியாளர் களேயாவர். எனவே அடிகளார் தம் புதுமை உணர்வுகள், வழி வழி வரும் தமிழ்ச் சமய உலக மரபின் தொடர்ச்சியேயாகும். '''– டாக்டர் வா.செ. குழந்தைசாமி, மேனாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்.'''<ref>{{cite book |last1=தவத்திரு பொன்னம்பல அடிகளார் |title=குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை, தொகுதி – 16 |publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை |pages=487 |ref=7}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குன்றக்குடி_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது