களம்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kalampattu" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:25, 9 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

களம்பட்டு என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய கலை நிகழ்ச்சி.ஆகும்.[1]

களம்பட்டு

இது ஒருவழிபாடாகச் செய்யப்படுகிறது. 'குருப்' எனப்படும் ஒரு பாரம்பரிய சமூகத்தைச் சேர்ந்தவர் களம்பட்டு வழிபாட்டிற்கான பொறுப்பாளராக உள்ளார். பத்ரகாளி, அய்யப்பன், வேட்டக்கோருமகன், நாகக் கடவுள் போன்ற கடவுள்களின் ஆசீர்வாதங்களுக்காக இவ்வழிபாடு செய்யப்படுகிறது. குருப்பானவர் களம் எனப்படும் தரையில் கடவுளின் படத்தை ஐந்து வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்து,[1] அவரே அக்கடவுள் மீதான பாடல்களைப் பாடி, அந்தக் கடவுளை வழிபடுவார்.. வெளிச்சப்பாடு அல்லது கோமரம் (நம்பூதிரி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இதற்கான தூதராக இருப்பார்.) உச்சப்பாட்டு, கலப்பிரதிக்ஷினம் (வெவ்வேறு படிகள் மற்றும் தாளங்களுடன் களதை சுற்றி வருதல்), நாளிகேரமேரு (தேங்காயை பிரசாதமாக உடைத்தல்), மற்றும் களமாய்க்கல் (வழிபாட்டினை முடித்தல்) ஆகியன இதன் பகுதிகளாகும்.

பகுதிகள்

  • பட்டு கூரையிடல்  : (நிகழ்வின் தொடக்கம்)- வழங்குநரின் ஆலோசனையுடன் குருப் மண்டபம் அல்லது பாட்டுப்புரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையை அலங்கரிப்பதன் மூலம் இந்த நிகழ்வினைத் தொடங்குகிறார். பட்டு கூரையிட என்பது வழிபாட்டிற்கேற்ற சிவப்பு விதானத்தை உருவாக்குவதாகும். இதுவே களம்பட்டுவின் அதிகாரப்பூர்வ தொடக்கமாகும். சுத்தம் செய்யப்பட்ட பட்டரங்கின் மையத்தில் ஒரு பீடம் (முக்காலி) வைக்கப்படுகிறது. சிவப்புநிறப்பட்டுவிரித்து அதில் வாழையிலை வைக்கப்படுகிறது. அதன்மீது இரன்டரை நாழி அரிசி மீது தேங்காய் அடுக்கி வைக்கப்படுகிறது. அதற்கு மேலே வாழைக்கன்று, வெற்றிலைப்பாக்கு, நெல், அவுல், மலர்கள், வெல்லம், வாழைப்பழம், தேங்காய் ஆகியவை வழிபாட்டிற்காக வைக்கப்படுகிறது. இதன்பிறகு குருப்பானவர் கூரையிடலைச் செய்கிறார். சில நேரங்களில் அதே மண்டபத்தில் தொடர்ச்சியான பாட்டு நிகழ்வுகள் இருக்கலாம். எனவே கூரை அல்லது அலங்காரம் தொடர் நிகழ்வுகள் முடிந்தபிறகு மட்டுமே அகற்றப்படும். உதாரணமாக, நிலம்பூர் பாட்டு 41 நாட்களில்.முடியும்
  • உச்சப்பாட்டு- களம்பட்டிற்கான ஓவியம் வரைதல் உச்சப்பாட்டு (மதியம் பாடல்கள்) என்ற சடங்கோடு தொடங்குகின்றன. கூரையிடலுக்குப் பிறகு பிராமணப் பூசாரி ஒருவர் சூரிகா அல்லது சூரிகா எழுநாழிக்கல் எனப்படும் ஒரு வாளை ஸ்ரீகோவில் முதல் பட்டரங்கு வரை கொண்டு வந்து பீடம் அருகே வைப்பார். இந்த வாள் எந்தத் தெய்வத்தை வழிபடுகின்றனரோ அதன் பிரதிநிதித்துவமாகக் கருதப்படுகிறது.. களம்ம்பட்டில் வாளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. பிராமண பூசாரி கணபதிக்கும் சூரிக்காவுக்கு பூஜை செய்கிறார். (இச்சூரிகா பட்டுவுக்குச் சொந்தமான தெய்வத்தைக் குறிக்கும்). அந்த நேரத்தில் பூஜைக்கிடையில் குருப் உச்சப்பாட்டுக்குத் தயாராக இருப்பார்.
  • களம் பூஜை : மண்டபத்தை அலங்கரித்தபின் அந்த இடத்தில் தெய்வத்திற்கான ஒரு பூஜை செய்யப்படுகிறது, மேலும் அந்த பூஜை அந்த நாளின் களம்பட்டியின் கடைசி கட்டத்தில் மட்டுமே முடிவடையும் இதனை களம் மாய்க்கல் என்கின்றனர். வழிபாடு தொடங்கும் அந்த தருணத்திலிருந்து மண்டபத்தில் தெய்வம் இருப்பதாகக் கருதப்படுகிறது. குருப் வழிபாட்டின் பொழுது சில பக்திப் பாடல்களைப் பாடுகிறார் (ஒவ்வொரு கட்டத்திலும் பாட வழக்கமான பாடல்கள் உள்ளன)
  • சந்தியா வேளை : தீப ஆராதனை, கெலி, தயம்பகா, குஷாலிப்பாட்டு போன்ற நிகழ்வுகள் சந்தியா வெளையின் பொழுது நிகழ்த்தப்படும். வழிபாடு முடிந்த பின்னர், நிகழ்வை ஏற்பாடு செய்தவரின் பொருள்வசதிக்கேற்ப இது ஏற்பாடு செய்யப்படும். ஸ்ரீ பத்ரகாளி, கரியம் கலிமூர்த்தி தேவி ஆகியோருக்கு கேரளாவின் அடூர், மலமேக்கரை, பத்தனம்திட்டா ஆகிய ஊர்களில் பாரம்பரியமாக இது நடத்தப்படுகிறது.
  • முல்லக்கன் பாட்டு : சந்தியவேளையின் போது குருப் களத்தைத் தயாரிப்பார். அவர் தெய்வத்தின் வழக்கமான படத்தை வெள்ளை, மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு ஆகிய ஐந்து வண்ணங்களுடன் உருவாக்குகிறார். களம் தயாரானதும் தெய்வமும் கோமாரமும் களத்திற்கு பாடல்களுடன் ஊர்வலமாக வரவேற்று எடுத்து வரப்படும். இங்கே வசதிக்கேற்ப யானை, மேளம் மற்றும் பிற அலங்கார பொருட்களையும் ஊர்வலத்தில் சேர்க்கலாம். செல்லக்கர, தொழுபடம், பானிக்குளம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த களம்பாட்டு குழுக்களில் கல்லாட்டு ஹரிதாஸ் குருப் அவர்களின் மகனான கல்லாட்டு அச்சுத குருப் இந்தத் துறையில் மிகவும் புகழ்பெற்ற கலைஞர்களில் ஒருவர்,
  • களப்பிரதக்‌ஷனம் :
  • நளிகேமரு (தேங்காய் உடைத்தல்) : என்பது பெண்கள்-தெய்வங்கள் (தெய்வங்கள்) தவிர களம்பட்டுக்கு செய்யப்படும் ஒரு முக்கியமான செயல்பாடு. தேங்காயை உடைக்கும் எண்ணிக்கை 3 முதல் 12008 வரை இருக்கும்
  1. 1.0 1.1 "Kerala Folk Music and Dance". eKerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 2010-12-14."Kerala Folk Music and Dance". eKerala Tourism. Retrieved 14 December 2010. பிழை காட்டு: Invalid <ref> tag; name "KFMAD" defined multiple times with different content
"https://ta.wikipedia.org/w/index.php?title=களம்பாட்டு&oldid=3166551" இலிருந்து மீள்விக்கப்பட்டது