தாலிராண்டு பெரீகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 2:
==தாலிராண்டு பெரீகார்==
இவர் ஒரு அரசியலாளர். பாரிஸில் 1754-ல் பிறந்தார். குழங்தைப்பருவத்தில் நேர்ந்த விபத்தில் நொண்டியாகிவிட்டார். இவர் குடும்பத்தவர் இவரைத் திருச்சபையில் ஈடுபடுத்த விரும்பினர். இவருக்கு அதில் நாட்டம் இல்லையென்றாலும் தக்க கல்விபயின்று 1775-ல் பாதிரியாரானார். 1788-ல் ஒட்டனுக்கு பிஷப்பாக நியமிக்கப்பெற்றார், பிரெஞ்சுப் புரட்சி நடந்த 1789-ல் பிரெஞ்சுப் பார்லிமென்டு உறுப்பினரானர். உரிமைச்சாசனத்தில் கையொப்பமிட்டு அரசாங்கத்துக்குத் திருச்சபையின் மேலுள்ள ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக 1791-ல் திருச்சபையிலிருந்து நீக்கப்பெற்றார். 1792-ல் லண்டனுக்குத் தூது சென்றார், அரசர் பால் சார்பு உடையவராகக் காணப்பட்டதினால் குடியரசு ஆட்சியாளர்கள் இவரைப் பிரான்ஸுக்கு வரக்கூடாது என 1794-ல் தடை விதித்தனர். சில ஆண்டுகள் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் இருந்து விட்டு, 1796-ல் தாய்நாட்டுக்குத் திரும்பினர். '''டைரெக்டரி''' என்ற ஆட்சிக்குழுவினர் இவரை வெளிநாட்டு விவகார அமைச்சராக நியமித்தனர். பின்னர் டைரெக்டரியைக் கவிழ்ப்பதில் நெப்போலியனுக்குத் துணை புரிந்து, அவருடைய ஆட்சியில் தொடர்ந்து அமைச்சராக இருந்துவந்தார். நெப்போலியன் ஆட்சியின் பிற்பகுதியில் தாலிராண்டு அவருடைய பகைவராக மாறினார். 1814-15-ல் ஐரோப்பிய விவகாரங்ககாத் தீர்க்க வியன்னாவில் கடந்த காங்கிரஸில் இவர் முக்கியமானவராக விளங்கி, பிரான்ஸுக்கு நன்மையைத் தேடித்தந்தார். பதினெட்டாம் லூயி அரசராக வந்தபோது இவர் அமைச்சராக நியமனம்பெற்றுச் (1814), சில மாதங்களில் விலகிக்கொண்டார். 1830-ல் நடந்த புரட்சியில் 18-ஆம் லூயி பட்டத்தைத் துறந்தார். லூயி பிலிப் அரசரானார். புது மன்னர் இவரை இங்கிலாந்துக்குத் தூதுவராக அமர்த்தினர். இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல் நாடு களுக்கிடையே நாற்கூட்டு உறவை ஏற்படுத்தினர். இவருடைய அரசியல் திறமை போற்றத்தக்கதாகும்.{{Reflist}}<ref>http://www.tamilvu.org/library/libindex.htm</ref>
 
[[பகுப்பு:1754 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தாலிராண்டு_பெரீகார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது