நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
[[படிமம்:Chambery interieur mediatheque 600px.jpg|right|200px|thumb|ஒரு நவீன நூலகத்தின் உட்தோற்றம்]]
 
'''நூலகம்''' (''library'') என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். அறிவை வளர்க்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று கூடும் இடம் நூலகம் ஆகும்.மரபு வழியான நோக்கில் இது [[நூல்]]களின் சேமிப்பு எனலாம். இந் நூல்களையும், வேறு மூலங்களையும், சேவைகளையும், இவற்றைத் தாங்களே சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது [[ஆய்வு]]களுக்காகத் தொழில்முறை உதவி தேவைப்படும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
 
நூல்கள் தவிரத் தகவல் சேமிப்புக்கான பிற ஊடகங்களைச் சேமித்து வைத்திருப்பதுடன், பல நூலகங்கள் இப்பொழுது, [[நுண்படலம்]] (microfiche), [[நுண்சுருள்தகடு]] (microfilm), [[ஒலிநாடா]]க்கள், [[குறுவட்டு]]கள், [[ஒலிப்பேழை]]கள், [[ஒளிப்பேழை]]கள், டிவிடிக்கள் என்பவற்றில் பதியப்பட்ட [[நிலப்படம்|நிலப்படங்கள்]], வேறு ஆவணங்கள், [[ஓவியம்|ஓவியங்கள்]], என்பவற்றைச் சேமித்துவைக்கும் இடங்களாகவும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான இடங்களாகவும் உள்ளன. இவை தவிர, தனியார் தரவுத் தளங்களுக்கான அணுக்கம் மற்றும் இணைய அணுக்கம் முதலியவையும் வழங்கப்படுகின்றன. எனவே இன்றைய நவீன நூலகங்கள், பல மூலங்களிலிருந்து, பல்வேறு வடிவங்களில் [[தகவல்]]களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான இடங்களாகவும் திகழ்கின்றன. இவற்றோடு, தகவல்களைத் தேடி அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும், தகவல் தேவைகளுக்கு விளக்கமளிப்பதிலும், நிபுணத்துவம் கொண்டவர்களான நூலகர்களின் சேவையும் வழங்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது