நீளம் தாண்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நீலம் தான்டுதல் வரலாறு
அடையாளங்கள்: Reverted முகவடி Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 2:
[[image:Sdiri vole.jpg|thumb|300px|[[ஹெல்சிங்கி]]யில் நடந்த போட்டியொன்றில் நீளம் பாய்தல் வீரர்கள், ஜூலை 2005.]]
[[படிமம்:Women's Long Jump Final - 28th Summer Universiade 2015.webm|thumbnail]]
'''நீளம் தாண்டுதல்''' (இலங்கை வழக்கு: '''நீளப்பாய்ச்சல்''' அல்லது '''நீளம் பாய்தல்''') என்பது ஒரு [[தடகள விளையாட்டு]] ஆகும். இதில் [[விளையாட்டு வீரர்]] 💪🏻💪🏻💪🏻ஒருவர்ஒருவர் ஓடி வந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தனது உடல்வலு, [[வேகம்]] ஆகியவற்றைப் பயன்படுத்தி நீண்ட தூரத்தைத் தாண்டிப் பாய முயற்சிப்பார். பாய்வதற்கான இடத்தில் செவ்வக வடிவிலான ஒரு குழி வெட்டப்பட்டு அதில் மணல் நிரப்பப்பட்டிருக்கும். அதன் ஒரு முனைக்கு அருகே பாய்தலைத் தொடங்குவதற்கான இடம் குறிக்கப்பட்டிருக்கும் இவ்விடத்தில் இதற்கெனச் செய்யப்பட்ட மரப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதற்கு அப்பால் வீரர்கள் ஓடு வருவதற்கான [[ஓடுதடம்]] இருக்கும். இந்த ஓடுதடத்தில் தமக்கு வசதியான ஓர் இடத்திலிருந்து வீரர்கள் வேகமாக ஓடிவந்து குறிப்பிட்ட மரப்பலகையில் காலூன்றி எழும்பிப் பாய்வார்கள். அவர்கள் பாய்ந்த தூரம் அளக்கப்படும். அதிக தூரம் பாய்ந்தவர்கள் [[வெற்றி]] பெற்றவர்கள் ஆவர்.
 
பாயும் போது வீரர்களின் காலடியின் எப்பகுதியாவது மரப்பலகையைத் தாண்டி உள்ளே இருப்பின் அப் பாய்ச்சல் விதிப்படியான பாய்ச்சலாகக் கணிக்கப்பட மாட்டாது. விதி முறைகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கண்காணிப்பது நடுவரின் கடமையாகும். மரப்பலகைக்குப் பின்னால் எவ்விடத்திலிருந்தும் வீரர்கள் பாயத் தொடங்கலாம். எனினும், தூரங்கள் மரப்பலைகையின் விளிம்பிலிருந்தே அளக்கப்படும். இதனால், பாய்ச்சலின் அதிக தூரம் அளக்கப்பட வேண்டுமாயின் வீரர்கள் இக் கோட்டுக்கு எவ்வளவு அண்மையில் இருந்து தொடங்க முடியுமோ அவ்வளவு அண்மையிலிருந்து பாயத் தொடங்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/நீளம்_தாண்டுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது