சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செங்குட்டுவனின் தாய் சோழ நாட்டு இளவரசி என்பதற்கு பதிலாக, சோழ அரசன் என்று உள்ளது. அது தவறு.
வரிசை 12:
மாற்றுக்கருத்து.
 
சங்க கால புலவர் மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் அவர்களுக்கு பிறகு மகதத்தை ஆண்ட மௌரியர்களின் தமிழக படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார். மாமூலனார் முதிய வயதில் சோழன் கரிகாலன் பற்றி பாடியுள்ளார்.பரணர் தன் இள வயதில் கரிகாலன் பற்றி பாடியுள்ளார்.சேரர்களில் கரிகாலனால் நெடுஞ்சேரலாதன் வெல்லப்பட்ட பிறகு சில காலம் கழித்து அறியனைஅரியனை ஏறுபவன் சேரன் செங்குட்டுவன். செங்குட்டுவன் பற்றி பரணர் பாடியுள்ளார். இதன் மூலம் கரிகாலன் சேரனை விட சில வருடம் முதியவன் என்பது தெளிவாகிறது. சேரன் செங்குட்டுவன் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு ஆகும்.
 
தமிழ் இலக்கியங்களில், [[சிலப்பதிகாரம்]] அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் [[பொதியம்|பொதிய மலை]]யில் கல்லெடுத்துக் [[காவிரி]] ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகாது என்று எண்ணிய அவன், ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான [[கனக விசயர்|கனக விசயரை]] வென்று, [[இமயமலை]]யில் கல்லெடுத்து, அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]] நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_செங்குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது