வை. கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 37:
கோவிந்தன் 12-6-[[1912]]ஆம் நாள் தமிழ்நாட்டில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] அமைந்துள்ள இராயபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். உள்ளூரிலேயே எட்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் [[பர்மா|பர்மாவில்]] [[வணிகம்]] செய்துகொண்டிருந்த தன் தந்தைக்கு உதவுவதற்காகப் பர்மாவிற்குச் சென்றார். அங்கு தந்தையின் [[தேக்கு]] மர ஆலையிலும் [[செட்டிநாடு]] பாங்கிலும் வேலை செய்தார். வட்டிக்குப் பணம் கொடுத்து, மக்களைக் கசக்கிப் பிழிந்து அப்பணத்தைத் திரும்பப் பெறும் வழக்கம் கோவிந்தனுக்குப் பிடிக்கவில்லை. எனவே [[1934]]ஆம் ஆண்டில் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார். குடும்ப வறுமையின் காரணமாகக் கோவிந்தன் அவர்தம் பங்காளியான வைரவன் செட்டியார், முத்தையாச்சி இணையருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார்.<ref name="one">http://www.appusami.com/v211/v211vaigovindhan.asp</ref><ref name="five">http://tamil.thehindu.com/opinion/columns/article24142105.ece?utm_source=HP&utm_medium=hp-editorial</ref>
 
== அச்சகமும் இதழ்களும் ==
 
கோவிந்தன், [[1935]]ஆம் ஆண்டின் தொடக்கத்தில் [[சென்னை|சென்னைக்கு]] வந்தார். அங்கே தனது கையிலிருந்த ஒரு இலட்சத்தைக் கொண்டு '''சக்தி''' என்னும் '''அச்சகத்தையும்''' 1935ஆம் ஆண்டு [[ஏப்ரல்]] மாதத்தில் [[சுத்தானந்த பாரதியார்|சுத்தானந்த பாரதியாரை]] ஆசிரியராகக் கொண்டு சக்தி என்னும் '''திங்கள் இதழையும்''' தொடங்கினார்.<ref name="one"/> இந்த இதழ் [[1950]]ஆம் ஆண்டு [[திசம்பர்]] திங்கள் வரை தொடர்ந்து வெளிவந்தது. பின்னர் சற்று இடைவெளிக்குப் பின்னர், [[1953]] ஆம் ஆண்டு [[நவம்பர்|நவம்பரில்]] தொடங்கி [[1954]]ஆம் ஆண்டில் சில மாதங்கள் வரை இவ்விதழ் வெளிவந்தது.<ref name="three">http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=31&cid=14&aid=2744</ref> இவ்விதழின் ஆசிரியராக யோகி. [[சுத்தானந்த பாரதி|சுத்தானந்த பாரதியாருக்குப்]] பின்னர், [[தி. ஜ. ரங்கநாதன்]], [[சுப. நாராயணன்]], [[கு. அழகிரிசாமி]], [[விஜய பாஸ்கரன்]] ஆகியோர் பணியாற்றினர். இறுதியில் வை. கோவிந்தனே ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.<ref name="one"/>
வரிசை 205:
கல்கி [[கல்கி (எழுத்தாளர்)|இரா. கிருட்டிணமூர்த்தி]], தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவாக இருந்தபொழுது வை. கோவிந்தன் அதன் துணைத் தலைவராக இருந்தார். தென்னிந்தியப் புத்தகத் தொழில் கழகத்தின் பொருளாளராகவும், தலைவராகவும் பணியாற்றினார். அப்பொழுது 'வீட்டுக்கொரு நூலகம்' என்னும் முயற்சியில் ஈடுபட்டார்.
 
== குடும்பம் ==
 
அழகம்மை என்பவரைக் கோவிந்தன் மணந்தார். சில ஆண்டுகளில் அவர் மறைந்த்தும் [[புதுச்சேரி]] [[அரவிந்தர்]] ஆஸ்ரமத்தில் துறவு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் சிலரின் அறிவுரைப்படி 1946இல் மு.அ. செல்லப்ப செட்டியாரின் மகள் வள்ளியம்மையை மறுமணம் புரிந்தார்.<ref name="six">http://www.kalachuvadu.com/issue-141/page70.asp</ref>
வரிசை 225:
# கூனன் கதை
== இறப்பு ==
வாழ்வின் இறுதிப் பகுதியில் வறுமையின் வாய்ப்பட்ட சக்தி வை. கோவிந்தன் சென்னையில் ஒரு விடுதியில் [[1966]] – [[அக்டோபர்]] – 16ஆம் நாள் மரணமடைந்தார்.
 
வரிசை 232:
சக்தி வை. கோவிந்தனைப் பற்றி அவருடைய நூற்றாண்டை ஒட்டி, '''சக்தி வை. கோவிந்தன் தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை''' என்னும் நூலைப் பழ. அதியமான் எழுதியிருக்கிறார்.
 
== மேற்கோள்கள் ==
==சான்றடைவு==
{{reflistReflist}}
 
[[பகுப்பு:1912 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வை._கோவிந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது