சின் சி ஹுவாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
'''யிங் ஷெங்''' என்னும் சொந்தப் பெயர் கொண்ட '''சின் ஷி ஹுவாங்''' (பிறப்பு-இறப்பு [[கிமு]] 259 – செப்டெம்பர் 10, [[கிமு]] 210), இவர் [[கிமு]] 247 முதல் கிமு [[221]] வரை [[சீனா]]விலிருந்த நாடுகளில் ஒன்றான ''[[சின் அரசமரபு|சின்]]'' ''(Qin)'' வம்சத்தின் பேரரசராக இருந்தார். இவர் கிமு 221 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சீனாவின் முதல் [[பேரரசர்]] ஆனார். கிமு 210 இல் இறக்கும் வரை அவர் ஆட்சி புரிந்தார். இவர் சீனாவை ஒன்றாக இணைத்ததற்காகவும், "சட்டத்தின் ஆட்சி" என்னும் கொள்கையை அறிமுகம் செய்ததற்காகவும் பெயர் பெற்றார்.
 
சின் ஷி ஹுவாங், சீன வரலாற்றில் ஒரு சர்ச்சைக்கு உரியவராகவே இருந்து வருகிறார். சீனாவை ஒன்றிணைத்தபின் இவரும் இவரது தலைமை ஆலோசகர் [[லி சி]]யும், இணைப்பைப் பாதுகாக்குமுகமாக தொடர்ச்சியான பல சீர்திருத்தங்களைச் செயற்படுத்தியதுடன், [[சீனப் பெருஞ்சுவர்|சீனப் பெருஞ்சுவரின்]] முதல் அமைப்பு உட்பட மிகப் பெரிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினர்.<ref>[https://www.britannica.com/biography/Qin-Shi-Huang Qin Shi Huang, emperor of Qin dynasty]</ref><ref>[https://www.nationalgeographic.com/culture/article/qin-shi-huangdi Who was the Chinese emperor behind the terra-cotta warriors?]</ref>
 
8,000 ஆளுயர [[சுடுமட்சிலைப் படை]] வீரரால் காக்கப்படும்<ref>[https://www.britannica.com/topic/terra-cotta-army Terra-cotta army,
Chinese archaeology]</ref>, உயர் வேலைப்பாடு கொண்ட, புகழ் பெற்ற [[சமாதி]]; தேசிய அளவிலான பெருஞ் [[சாலை]] அமைப்புக்கள் என்பனவும் இத் திட்டங்களுள் அடங்கியிருந்தன.<ref>[https://www.bbc.com/tamil/global-57451353 சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய பேரரசர் சின் ஷே ஹுவாங் கல்லறை ரகசியம்; காவலுக்கு 8,000 படைவீரர்கள்]</ref> இவ்வமைப்பு வேலைகளின்போது பலர் உயிரிழந்தனர். பேரரசில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இவர் [[கன்பூசியனியம்|கன்பூசியனியத்தைத்]] தடை செய்ததுடன், அதன் அறிஞர்கள் பலரையும் உயிருடன் புதைத்ததாகவும் கூறப்படுகிறது. அரசால் அனுமதிக்கப்பட்டவை தவிர்ந்த ஏனைய நூல்கள் யாவும் எரிக்கப்பட்டன.
 
இவருடைய ஆட்சியில் இத்தகைய கொடுங்கோன்மையும், எதேச்சாதிகாரமும் நிலவியபோதும், சின் ஷி ஹுவாங் சீன வரலாற்றில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவர் சீனாவை ஒன்றிணைத்தது 2000 ஆண்டுகளாக நிலைத்திருந்தது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
*[https://www.thoughtco.com/qin-shi-huang-first-emperor-china-195679 Biography of Qin Shi Huang, First Emperor of China]
 
[[பகுப்பு:சீனப் பேரரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சின்_சி_ஹுவாங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது