மீனாட்சி மிஷன் மருத்துவமனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox hospital | Name = மீனாட்சி மி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:39, 20 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

மீனாட்சி மிஷன் மருத்துவமனை (ஆங்கில மொழி: Meenakshi Mission Hospital) மதுரையை மையமாகக் கொண்ட தனியார் மருத்துவமனையாகும். இது 1990 ஆம் ஆண்டு மருத்துவர் ந. சேதுராமனால் தொடங்கப்பட்டதாகும்.[1] 800 படுக்கை வசதிகளுடன் இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை உட்பட 42 சிறப்புத் துறைகளைக் கொண்டது.[2][3]

மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்
அமைவிடம் மதுரை, தமிழ்நாடு, இந்தியா
நிறுவல் 1990
வலைத்தளம் மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்
பட்டியல்கள்

வரலாறு

மூவேந்தர் முன்னணிக் கழகம் என்ற கட்சித் தலைவரும் சிறுநீரக மருத்துவருமான ந. சேதுராமன் என்பரால் 1985 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் எஸ்.ஆர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.[3] அந்த அறக்கட்டளையின் கீழ் 1990 ஆம் ஆண்டு மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக திருமதி ராஜம் சேதுராமன் 1985 முதல் 2021 வரை பொறுப்பிலிருந்தார்.[4] 1991 இல் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாறியது.[1] 2005 இல் இதன் துணைத் தலைவராக மரு. குருசங்கர் பெறுப்பேற்றார். 2020 காலக்கட்டத்தில் 330 மருத்துவர்களுடன் 350 கோடி மதிப்புள்ள மருத்துவமனையாக வளர்ந்துள்ளது.[1]

2019 இல் தானியங்கி அறுவை சிகிச்சை வசதியையும் 2021 மே மாதம் இந்தியாவில் முதன்முறையாக தொலை மருத்துவ தானியங்கிகளை அறிமுகம் செய்தது.[5][6]

தொண்டுப் பணிகள்

அண்ணப் பிளவு சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்று நோய் சிகிச்சை என ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.[7][2] இரத்ததான மூகாம், இலவச கண் மருத்துவ முகாம் என மருத்துவ சேவைகளை வணிக நோக்கின்றியும் செய்கின்றனர்.[8]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Guts and glory — how Dr Gurushankar turned a small hospital into a Rs 350cr empire". யுவர் ஸ்டோரி. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
  2. 2.0 2.1 "மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள்". தினத்தந்தி. 2015 அக்டோபர் 21. http://srtrust.org.in/images/charity_news%20_letter_dec_2015_final.pdf. பார்த்த நாள்: 20 June 2021. 
  3. 3.0 3.1 "OUR STORY". எஸ்.ஆர். அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
  4. "ராஜம் சேதுராமன்". மீனாட்சி மிஷன் மருத்துவமனி. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
  5. "தென் தமிழகத்தில் முதன்முறையாக மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதி தொடக்கம்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/05030633/The-first-time-in-South-TamilnaduRobotic-surgery-facility.vpf. பார்த்த நாள்: 20 June 2021. 
  6. "இந்தியாவிலேயே முதன்முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டெலிமெடிசின் ரோபோக்கள் அறிமுகம்". https://www.polimernews.com/dnews/142521/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D. பார்த்த நாள்: 20 June 2021. 
  7. "தொண்டுப் பணி". மீனாட்சி மிஷன் மருத்துவமனை. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
  8. "4 ஊர்களில் இன்று இலவச கண் மருத்துவ முகாம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.