விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்பு: புதிய பதிவு இணைக்கபட்டது
சிNo edit summary
வரிசை 4:
'''விண்மீன்''' (Star, நாள்மீன், நட்சத்திரம், உடு) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு [[வாயு]]க்களினாலும் [[பிளாஸ்மா]]களினாலும் ஆக்கப்பட்டுள்ளன.<ref name="How stas are composed?">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=They are composed largely of gas and plasma, a superheated state of matter composed of subatomic particles. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref> [[பூமி]]க்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் [[சூரியன்]] ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது [[பூமி]]யின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும்.பூமிக்கு அருகிலுள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும். எனினும் [[சூரியன்]] பூமிக்கு மிக அண்மையில் உள்ளதால் மற்றைய விண்மீன்களைப் போலல்லாது [[வட்டம்|வட்டமான]] தட்டுப்போல் தெரிகிறதோடு மட்டுமன்றி பகலில் வெளிச்சமும் தருகிறது. [[அணுக்கரு இணைவு]] வினை நிகழும் பொழுது விண்மீன்களில் இருந்து எராளமான ஆற்றல் வெளிவிடப்படுன்றது; பொதுவாக அனைத்து விண்மீன்களும் [[ஒளி]], [[வெப்பம்]], [[புற ஊதாக் கதிர்]]கள், [[எக்சு-கதிர்|எக்சு ரே - கதிர்கள்]] மற்றும் வேறு பல கதிர் வீச்சுக்களை உற்பத்தி செய்கின்றன.<ref name="Producing things of stars">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=Stars are cosmic energy engines that produce heat, light, ultraviolet rays, x-rays, and other forms of radiation. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref> உடுக்களில் அதிகமாக [[ஐதரசன்|ஐதரசனும்]], [[ஹீலியம்|ஹீலியமுமே]] காணப்படுகின்றது. அங்கு [[ஐதரசன்]] [[அணுக்கரு இணைவு]] மூலம் [[ஹீலியம்|ஹீலியமாக]] மாறும் செயற்பாடு இடம்பெறும்.
 
[[அண்டம்|அண்டத்தில்]] பல பில்லியன் கணக்கான [[விண்மீன் பேரடை]]கள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு [[விண்மீன் பேரடை]]களிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.<ref name="Number of stars in space">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=No one knows how many stars exist, but the number would be staggering. Our universe likely contains more than 100 billion galaxies, and each of those galaxies may have more than 100 billion stars. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref><ref>{{Cite web|url=https://tamilastronomy.in/|title=தமிழ் மொழி விண்வெளி தகவல்|website=Tamil Astronomy|language=en-US|access-date=2021-06-21}}</ref>
 
[[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்துக்கு]] வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் [[புரொக்சிமா செண்டோரி]] என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 [[ஒளியாண்டு]]கள் (4 இலட்சம் கோடி [[கிலோமீட்டர்]]கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் ஆகும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 [[கோடி]] கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் [[விண்மீன் குழாம்|உடுத்தொகுதிகளாகவும்]], கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவு வானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3000 தென்படும்.<ref name="nebulae">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=Yet on a clear, dark night Earth's sky reveals only about 3,000 stars to the naked eye. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது