பயனர்:சி.யமுனா/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
== யுனெசுகோ உலகப் பாரம்பரியத் தளம் ==
மேற்கு தொடர்ச்சி மலை 2012 ஆம் ஆண்டு உலக பாரம்பரியத் தளமாக மாறியது.கரியன் சோலாவைத் தவிர, தமிழ்நாட்டில் உள்ள ஆணைமலை துணை தொடரில் கிராசு மலைகள் தேசியப் பூங்கா மற்றும் [[முக்கூர்த்தி தேசியப் பூங்கா]] ஆகிய இரண்டு தேசிய பூங்காக்கள் சேர்ந்துள்ளன.
[[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]], [[ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம்|சிறீவில்லிப்புத்தூர் நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம்]] மற்றும் திருநெல்வேலி வடக்கு வனப்பிரிவு ஆகிய மூன்று பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் கூடுதலாக மேற்குத் தொடர்ச்சிமலையில் சேர்ந்துள்ளன. இந்த பகுதிகள் அனைத்தும் முன்னதாக இந்தியாவின் 1980 ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டன.

[[யுனெசுகோ]] பட்டியலில் இப்பகுதி சேர்க்கப்படுவதால் புதியதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கக்கூடாது என்று மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் மக்களுக்கு அப்போது கூறப்பட்டது. இப்பகுதி உலக பாரம்பரிய தளமாக மாறுவதற்கு முன்னர் அவசிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவை சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர்களுக்குக் கூறப்பட்டது.<ref name=Sudhi>{{cite news |title=Heritage tag not to hit life on the Ghats |author=Sudhi, K.S. |url=http://www.thehindu.com/news/national/kerala/heritage-tag-not-to-hit-life-on-the-ghats/article3594879.ece |newspaper=The Hindu |date=3 July 2012 |access-date=4 November 2015}}</ref>
 
இப்பாரம்பரிய தளத்தின் உயர் மலைவாழிட வன சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்திய பருவமழை வானிலை முறையை பாதிக்கின்றன" என்று உலக பாரம்பரியக் குழு கூறியது. இப்பகுதியின் [[வெப்ப மண்டலம்|வெப்பமண்டல காலநிலையை]] மிதமானதாக நிர்வகிப்பதன் மூலம், பூமியின் பருவமழை முறையின் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இருக்கும். உலகளவில் அச்சுறுத்தலுக்கு ஆளான 325 [[தாவரங்கள்|தாவரங்களுக்கும்]], [[விலங்குகள்]], [[பறவைகள்]], [[ஊர்வன]], மற்றும் [[மீன்]] இனங்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகள் புகலிடமாக உள்ளன.<ref name=UNESCO/>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:சி.யமுனா/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது