உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎June 2021: வருக என வரவேற்கிறேன்.
வரிசை 9:
வணக்கம். ஆக்கநோக்கு என்று நீங்கள் குறிப்பிடுவது எதை? ஆங்கில விக்கிப்பீடியாவையே மொழி பெயர்க்கிறேன். நடுநிலையான கருத்துக்களையே சேர்க்கிறேன். தமிழில் பேசவே படாத பால் புதுமையினர் பற்றிய கட்டுரைகளை எழுதுவது என் விருப்பம். புதியவள் என்பதால் சில தவறுகள் இடம்பெறலாம். வேறு உள்நோக்கம் இருந்தாலோ அல்லது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு முரணாக இருந்தாலோ சுட்டிக்காட்டுங்கள். நன்றி.
::விக்கிப்பீடியாவுக்கு வருகஎன வரவேற்கிறேன்! உங்கள் பங்களிப்புகளைத் தொடருங்கள். புதிதாகச் சேர்பவர்கள் பலருக்கும் இப்படியான சிறு சிக்கல்கள் முதலில் ஏற்படுவது வழக்கம்தான், கவலைப்படாதீர்கள். அதிகம் அறியப்படாத துறைகளில் நீங்கள் பங்களிக்க வந்திருப்பதைக் காண மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்களின் படைப்புகளால் விக்கிப்பீடியா பன்முகத்தன்மையோடு நல்ல வகையில் வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் இருப்பதாக நினைக்கின்றேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 23:12, 26 சூன் 2021 (UTC)
:::{{ping|செல்வா}} உங்கள் புரிதலுக்கு நன்றிகள். கொஞ்சம் கொஞ்சமாக பழகுகிறேன். எந்த தவறான உள்நோக்கமும் இல்லை. ஆனால் நுழைந்தவுடனேயே பாகுபாடும் ஒடுக்குமுறையும். சலித்துவிட்டது. பேசாமல் ஒதுங்கிப்போவோமா என்று கூட நேற்று யோசித்தேன். என்னைப் போன்றவர்களின் வாழ்க்கை நரகம். அதை வாழ்ந்துபார்த்தால் தான் தெரியும். அந்த வேதனைகளை வெளியுலகுக்கு காட்ட ஒரு தளமாகவேனும் விக்கிப்பீடியாவை மாற்ற முயன்றால் காரணமின்றிய காழ்ப்பு. ஆனால் விக்கிப்பீடியாவில் எதிர்ப்பு இந்தளவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை தான். உங்களைப் போன்றோரின் ஆதரவு ஓரளவு தெம்பைத் தருகிறது. அம்மண தேசத்தில் கோவணாண்டிகள் ஆகிவிட்டோம். ஒருநாள் எங்களையும் நிரூபிப்போம். நன்றியும் அன்பும். --[[பயனர்:Tamil.lgbt|Tamil.lgbt]] ([[பயனர் பேச்சு:Tamil.lgbt|பேச்சு]]) 08:34, 27 சூன் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Tamil.lgbt" இலிருந்து மீள்விக்கப்பட்டது