விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
== இலக்கு நிறைவு - நாட்களை இறுதி செய்வது குறித்து ==
வணக்கம், இலக்கினை நிறைவு செய்ய ஏதேனும் ஒரு நாளை இறுதி செய்வது நல்லது. ஜூலை 10 என்பதனை இறுதி ஆக்கலாம் என்பது என் கருத்து. மற்றவர்கள் கருத்தினை இட்டால் நாம் மாணவர்களுக்குத் தெரிவிக்கலாம். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 13:53, 27 சூன் 2021 (UTC)
 
== பயிற்சிக்கு பின்னான ஒரு உரையாடல் ==
 
===விக்கிப்பீடியர்களிடையே===
முறையான பயிற்சிகள் அனைத்துத் திட்டங்கள் குறித்தும் நடந்து முடிந்தன. (தேவைக்கேற்ப ஐயம் களையும் சந்திப்புகள் நடக்கும்) காணொளிகள் அனைத்தும் [https://www.youtube.com/playlist?list=PL18ecMyecNNG6XBxRH4iHutFJSMkILogT இங்கே] ஏற்றப்பட்டுள்ளன. பொதுவான விக்கிக்கூடல் முடிந்த பின்னர் அது குறித்த ஒரு கலைந்துரையாடல் நடப்பது போல இம்முறை ஜூன் 27 அன்று காலை இணையவழியில் கலந்து பேசினோம். இதில் மகாலிங்கம், பாலாஜி, பார்வதிஸ்ரீ, ஸ்ரீதர், தகவலுழவன், கி.மூர்த்தி, பாலு ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். பொதுவான அனுபவப் பகிர்வுகளுக்கிடையே சில நிறைகுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டன. கடந்த முறையைவிட இம்முறை அதிக விக்கிப் பயனர்கள் வழிகாட்டியது, புதிய கல்லூரிகள் கலந்து கொண்டது, சில கருவிகள் கொண்டு மாணவர்களைக் கண்காணிக்க முடிந்தது, மாணவர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பு, சிறப்புப் பயிற்சிக்கான மாணவர்கள் போன்றவை சிறப்பான அனுபவமாக இருந்தன. வெவ்வேறு கல்லூரிகள் என்பதால் அம்மாணவர்களை ஒருங்கிணைத்தல், வாட்சப் குழுவில் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளை எதிர்கொள்தல், நேர மேலாண்மை போன்றவை சவால்களாக இருந்தன.
 
அதிகமாகக் கைப்பேசி சார்ந்த பயிற்சிகளை அளிக்க வேண்டும். சின்ன சின்ன வீட்டுப் பாடங்களை ஒவ்வொரு அமர்விலும் உறுதி செய்ய வேண்டும், பயிற்சித் தலைப்புகளுக்கான சிறுசிறு காணொளிகளை உருவாக்குதல், பயிற்சியாளர்களிடையே தலைப்புகளைப் பிரித்து அமர்வுகளின் நேரத்தைக் குறைத்தல், பயிற்சிக்கு முன்னரே காணொளிகளைக் காண அறிவுறுத்தல், பங்களிக்க ஏதுவாக முன்கூட்டியே தலைப்புகள் பரிந்துரைத்தல் போன்றவை பரிந்துரைகளாகக் கலந்து கொண்டவர்கள் முன் வைத்தனர். மாணவர் பங்கேற்பிற்காக அமர்வுகளில் வணக்கப் பாடல், தொகுத்தல், நன்றியுரை போன்றவை நடந்தன அவற்றை நேர மேலாண்மை காரணமாகத் தவிர்த்தல், இதர அமைப்புகள் ஒருங்கிணைப்பில்லாமல் நேரடியாக அனைத்துக் கல்லூரிகளையும் நாமே ஒருங்கிணைத்தல், யூட்டியூப் ஒளிப்பதிவுகளை வெட்டி பொதுவகத்தில் ஏற்றுவதைவிடப் புதியதாக ஒளிப்பதிவு செய்துவிடலாம், சிறந்த பங்களிப்பிற்கு சிஐஎஸ் மூலம் பரிசுத் தொகை பெற்றுத்தருதல் போன்றவை விவாதத்தில் வந்தன.
 
எளிய பயிற்சியாகவோ ஏதேனும் ஒரு திட்டத்தில் மட்டுமான பயிற்சியாகவோ விக்கிக்குத் தேவையான பயிற்சியாகவோ மட்டும் சுருக்காமல் முழுமையான பயிற்சியாகவும், ஒருங்கிணைந்த அனைத்துத் திட்டப் பயிற்சியும், மாணவர்கள் ஆர்வத்தைக் கட்டுப்படுத்தாத பயிற்சியாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். வேவ்வேறு பின்புலத்திலிருந்து வரும் மாணவர்கள் வெவ்வேறு வகையில் ஆர்வம் கொள்ளலாம் இப்பயிற்சி அவர்களை எதிர்காலப் பங்களிப்பாளராகவும் மாற்ற இயலும். மாணவர்கள் முழுமையாக முடிக்கும் வரை தொடர் வழிகாட்டல் வழங்கல், இப்பங்களிப்புகள் குறித்த ஆய்வறிக்கை எழுதல், சான்றிதழ் தயாரிப்புப் பணி ஆகியவை செய்யக்கூடிய பணிகளாக முடிவு செய்தோம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 00:43, 28 சூன் 2021 (UTC)
 
===கல்லூரிகளிடையே===
(ஜூன் 28 மாலை நடக்கவுள்ளது)
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".