காயல்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
== பழமை ==
 
இந்நகர் தோன்றி ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது என்று இந்நகரில் கிடைக்கப்பெற்ற தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாண்டியர் ஆட்சி காலத்தில், மதுரை அதன் தலைநகரமாகவும், காயல்பட்டினம் அதன் துறைமுகமாகவும் திகழ்ந்தது என்று DISCOVERY OF INDIA எனும் நூலில் பண்டித ஜவகர்லால் நேரு கூறியுள்ளார்.
 
[[கலிபா]] [[உமர்]] காலத்தில் கி.பி. 642-ல் மாலிக் இப்னு தீனார் தலைமையில் இஸ்லாத்தை பரப்ப ஒரு குழு கடல் வழியாக கேரளா வந்து சேர்ந்தது<ref>பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயம்</ref>. அதில் ஒரு பகுதியினர் காயல்பட்டணம் வந்து குடியேறி கடற்கரையோரமாக ஒரு பள்ளியைக் கட்டினர். தற்போது இப்பள்ளி கோசுமறை அருகே புதையுண்டுள்ளது. இதன் இமாம் செய்யிது அஹமது ஷஹிது இப்னு முஹம்மது கரீம் மதனி ஆவார். இக்குழுவினர் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்னர் கடலேறி இப்பகுதி புதையுண்டுவிட்டது<ref>திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய“கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற நூல்</ref>.
== இரண்டாவது இசுலாமியர்களின் குடியேற்றம்: ==
கி.பி. 842ல் [[எகிப்து]] தலைநகர் [[கெய்ரோ]]வில் கலீபா அல்வாதிக் ஆட்சி காலத்தில் [[கலிபா]] [[அபூபக்கர்]] வம்சாவழியைச் சார்ந்த முஹம்மது கல்ஜி தலைமையில் ஒரு குழுவினர் எகிப்திய மன்னரின் புதிய கொள்கையை ஏற்க மறுத்து கடல் மார்க்கமாக ஜயவீர ராஜகாரு வேந்தர் காலத்தில் காயல்பட்டிணம் வந்து சேர்ந்தனர். இவர்கள் இந்நகரில் கி.பி.843ல் ஜும்ஆ பெரிய பள்ளியை கட்டினர்.<ref>மக்கள் உரிமை வாரஇதழ்– டிசம்பர், 23 – 29, 2005</ref>. காயல்பட்டணம் காட்டு மொகுதூம் என்பவர் அரபுநாட்டிலிருந்து இஸ்லாத்தைப் போதிக்க காயல்பட்டணம் வந்தார். இவர்களுக்கு அக்கால பாண்டிய மன்னன் கண்ணியப் படுத்தி நிலங்களை வழங்கியுள்ளார். ஹிஜ்ரி 571 ல் ஏர்வாடியில் அடங்கப்பட்டிருக்கும் இப்ராஹிம் என்பவருடன் காயல்பட்டணம் கீழ நெய்னார் தெருவில் அடங்கப்பட்டிருக்கும் கலீபா என்பவரும் & ஈக்கி அப்பா கலீபா என்பவரும் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டணம் வந்தனர். மன்னர் அதிவீரராம பாண்டியன் மகன் குலசேகரப் பாண்டியன் ஈக்கி அப்பா கலீபாவை திருநெல்வேலிக்குப் படைத் தளபதியாகவும், கலீபாவை நீதிபதியாகவும் நியமித்து, ஏர்வாடி இப்ராஹிமை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.
"https://ta.wikipedia.org/wiki/காயல்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது