காயல்பட்டினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 蟲蟲飛ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 35:
கி.பி. 842ல் [[எகிப்து]] தலைநகர் [[கெய்ரோ]]வில் கலீபா அல்வாதிக் ஆட்சி காலத்தில் [[கலிபா]] [[அபூபக்கர்]] வம்சாவழியைச் சார்ந்த முஹம்மது கல்ஜி தலைமையில் ஒரு குழுவினர் எகிப்திய மன்னரின் புதிய கொள்கையை ஏற்க மறுத்து கடல் மார்க்கமாக ஜயவீர ராஜகாரு வேந்தர் காலத்தில் காயல்பட்டிணம் வந்து சேர்ந்தனர். இவர்கள் இந்நகரில் கி.பி.843ல் ஜும்ஆ பெரிய பள்ளியை கட்டினர்.<ref>மக்கள் உரிமை வாரஇதழ்– டிசம்பர், 23 – 29, 2005</ref>. காயல்பட்டணம் காட்டு மொகுதூம் என்பவர் அரபுநாட்டிலிருந்து இஸ்லாத்தைப் போதிக்க காயல்பட்டணம் வந்தார். இவர்களுக்கு அக்கால பாண்டிய மன்னன் கண்ணியப் படுத்தி நிலங்களை வழங்கியுள்ளார். ஹிஜ்ரி 571 ல் ஏர்வாடியில் அடங்கப்பட்டிருக்கும் இப்ராஹிம் என்பவருடன் காயல்பட்டணம் கீழ நெய்னார் தெருவில் அடங்கப்பட்டிருக்கும் கலீபா என்பவரும் & ஈக்கி அப்பா கலீபா என்பவரும் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டணம் வந்தனர். மன்னர் அதிவீரராம பாண்டியன் மகன் குலசேகரப் பாண்டியன் ஈக்கி அப்பா கலீபாவை திருநெல்வேலிக்குப் படைத் தளபதியாகவும், கலீபாவை நீதிபதியாகவும் நியமித்து, ஏர்வாடி இப்ராஹிமை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.
 
== மூன்றாவது குடியேற்றம்: ==
[[முகம்மது நபி|முகம்மது நபி அவர்களின்]] வம்சாவழியைச் சார்ந்த சுல்தான் ஜமாலுத்தீன் தலைமையில் கி.பி.1284ல் காயல்பட்டணத்திற்கு ஒரு குழு வந்து சேர்ந்தது. இவர்கள் ஜும்ஆ பெரிய பள்ளியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினர். சுல்தான் ஜமாலுத்தீன் பரம்பரையினர், பிரபுக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஜும்ஆ பெரிய பள்ளியில் சுமார் 40,000 ற்கும் மேற்பட்ட இறைநேசர்கள் அடங்கியுள்ளனர். இவ்வூரில் முதன்முதலாக அமைக்கப்பட்ட தெருக்கள் நான்கு: நயினார் தெரு, சதுக்கைத் தெரு (பைக்காரத் தெரு), மஹ்தூம் தெரு & மரைக்காயர் தெரு ஆகியவை. பின்னர், ஊர் விரிவாக்கத்தின் போது பல தெருக்கள் உருவாகின. ஊரை அழகாக வடிவமைத்துள்ளனர். பெண்களுக்கென்று தனிப் பாதைகள் (முடுக்குகள்) அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் கூடுமிடத்திற்கு வெட்டை என்பார்கள். எகிப்து நாட்டின் சாலை அமைப்புகள், வீடு அமைப்பைப் போலவே இந்நகரில் வீடுகள், சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன. இன்றும் எகிப்துக்குச் சென்றால் இதே அமைப்பை பார்க்கலாம்.
==வீடு கட்டமைப்பு==
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும், இனத்திலும், சமுதாயத்திலும் அவர்களுக்கென்று தனித் தனி கலாச்சாரம், அமைப்புகள் இருக்கின்றன. அதே போல் அவர்களின் கட்டிடங்களும் அவர்கள் வாழும் வீடுகளும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்தே அமைக்கப்படுகின்றன. காயல்பட்டணத்திற்கென்று தனியாக வீட்டின் அமைப்பு இருக்கின்றது. மிகப் பெரும்பான்மையான வீடுகள் இதே மாதிரியே கட்டப்படுகின்றன..
வரி 47 ⟶ 49:
 
==சிறப்புகள்==
*இந்நகரில் மதுக்கடை, திரையரங்கம், காவல் நிலையம் ஆகியவை இல்லை
*இப்பட்டினம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் புகழ்பெற்ற வணிகத்தளமாகவும் துறைமுகமாகவும் விளங்கியது.
*காயல்பட்டினத்தில் நடந்த குதிரை வணிகத்தின் சிறப்பினை மார்க்கோ போலோ குறிப்புகளிலிருந்து அறியலாம். இதை வழுப்படுத்தும் விதமாக மலை மண்டலத்து குதிரைச் செட்டிகள் பற்றிய கல்வெட்டு பிற்காலப் பாண்டியர்களின் மாறமங்கலத்துக் கோயிலிலில் உள்ளது.<ref>தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/454</ref> மேலும் இக்கல்வெட்டில் சோனகர் என்னும் அரேபிய வணிகக் குழுக்கள் பற்றிய குறிப்பும் உள.<ref>தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் 8/455</ref>
"https://ta.wikipedia.org/wiki/காயல்பட்டினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது