கடவுச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
வரிசை 8:
கடவுச்சொல்லானது பாதுகாப்பானதாகவும் நினைவுபடுத்தக் கூடியதாகவும் அமைக்கப்பட்டிருத்தல் நன்று. வலுவான கடவுச் சொற்களை உருவாக்குவதற்கு அவை நீளமானதாக இருத்தல் வேண்டும். எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரியுருக்களைக் கடவுச் சொல் கொண்டிருத்தல் பாதுகாப்பானதாகும்.<ref>[https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx உங்கள் கடவுச் சொல்லைப் பரிசோதிக்கவும்-அது வலிமையானதா {{ஆ}}?]</ref>அதே போல, கடவுச் சொல்லானது [[எழுத்து]]கள், குறியீடுகள், எண்கள் என்பனவற்றைக் கொண்டிருத்தல், கடவுச் சொற்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றி அமைத்தல், ஒவ்வொரு கணக்குக்கும் வேறு வேறு கடவுச் சொற்களைப் பயன்படுத்தல் என்பனவற்றின் மூலம் கடவுச் சொல்லின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
 
== கடவுச்சொல் நினைவு ==
கடவுச்சொற்களை இணைய [[உலாவி]] மென்பொருட்களே நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் விருப்பத்தேர்வுகளை அமைத்துக்கொள்ள இயலும். பல்வேறுபட்ட வலைத்தளங்களைக் கையாளும் ஒரு பயனருக்குப் புகுபதிகை செய்ய வேண்டிய கடவுச் சொற்களை நினைவிற்கொண்டு அடுத்த முறை அந்த வலைத் தளங்களுக்குச் செல்லும்போது, தானாகவே உள்நுழையும் வசதி உள்ளது. ஆனால், இந்த வசதி வீட்டில் வைத்துப் பயன்படுத்தும் தனியாட்கணினிகளுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். பணியிடங்களில் பலர் பயன்படுத்தும் கணினிகளிலோ தனியார் இணைய உலாவு மையங்களிலோ இந்த வசதியை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.
 
== தவிர்க்க வேண்டியவை ==
[[அகரமுதலி]]களில் (எந்த மொழியிலாயினும்) உள்ள சொற்களைப் பயன்படுத்தல், [[அகரமுதலி]]களில் உள்ள சொற்களைப் பின்புறமிருந்து எழுதுதல், சொற்களை எழுதும்போது பொதுவாக விடப்படும் தவறுகள், பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகள், தொடரிகள், தொடர்ந்து வரும் வரியுருக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பெயர், பிறந்த நாள், வலவ ஒப்புதல் ஆவண இலக்கம், நாட்டு அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட விபரங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். [https://www.mediawiki.org/wiki/Help:Login_notifications 12345678], 222222, ''abcdefg'' போன்ற தொடரிகளையும் விசைப்பலகையில் அருகருகே உள்ள எழுத்துகளையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். <ref>[http://www.microsoft.com/security/online-privacy/passwords-create.aspx வலிமையான கடவுச் சொற்களை உருவாக்கவும் {{ஆ}}]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கடவுச்சொல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது